MI vs KKR Result: காஸ்ட்லி வீரர் ஸ்டார்க் வேகத்தில் சரிந்த மும்பை இந்தியன்ஸ்! ப்ளேஆஃப்புக்கு மிக அருகில் கொல்கத்தா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Mi Vs Kkr Result: காஸ்ட்லி வீரர் ஸ்டார்க் வேகத்தில் சரிந்த மும்பை இந்தியன்ஸ்! ப்ளேஆஃப்புக்கு மிக அருகில் கொல்கத்தா

MI vs KKR Result: காஸ்ட்லி வீரர் ஸ்டார்க் வேகத்தில் சரிந்த மும்பை இந்தியன்ஸ்! ப்ளேஆஃப்புக்கு மிக அருகில் கொல்கத்தா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 03, 2024 11:36 PM IST

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்டு, எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கிய வள்ளலாக இருந்து வந்த மிட்செல் ஸ்டார்க், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு மோசமான தோல்வி தனது உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க் (AP)

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் திர், நுவான் துஷாரா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். ரோகித் ஷர்மா இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

கொல்கத்தா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தை நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய மனீஷ் பாண்டே 42 ரன்கள் அடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அங்கிரிஷ் ரகுவன்சி மட்டுமே இரட்டை இலக்கத்தில் 13 ரன்கள் அடித்திருந்தார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் நுவான் துஷாரா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டை எடுத்தார்.

மும்பை சேஸிங்

170 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவரில் 145 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7வது வெற்றியையும், மும்பை இந்தியன்ஸ் 7வது தோல்வியையும் பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, டிம் டேவிட் 24 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.