தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam: இருளை அகற்றும் தீபத்தின் மகிமைகள்!

Karthigai Deepam: இருளை அகற்றும் தீபத்தின் மகிமைகள்!

Dec 06, 2022, 05:12 PM IST

தீபம் ஏற்றப்படுவதால் உண்டாகும் மகிமைகள் குறித்து இங்கே காண்போம்.
தீபம் ஏற்றப்படுவதால் உண்டாகும் மகிமைகள் குறித்து இங்கே காண்போம்.

தீபம் ஏற்றப்படுவதால் உண்டாகும் மகிமைகள் குறித்து இங்கே காண்போம்.

தீபத்தில் இருக்கும் சுடரொளியின் மூலம் சிவபெருமான் காட்சியளிக்கிறார் என ஆன்மீகம் கூறுகிறது. கார்த்திகை தீபத் திருநாளன்று அனைவரும் தங்களது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அன்றைய தினம் மட்டுமல்லாமல் பொதுவாகவே விளக்கேற்றி வழிபாடு செய்தால் மங்களம் உண்டாகும் என்பது ஐதீகமாகும். தீபம் ஏற்றுவதால் ஏற்படும் மகிமைகள் குறித்து இங்கே காண்போம்.

சமீபத்திய புகைப்படம்

Today Rasipalan : ‘இன்று பணமழைதான் போங்க..பதவி உயர்வு யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 06, 2024 04:30 AM

Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 05, 2024 04:48 PM

குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது

May 05, 2024 03:57 PM

பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்

May 05, 2024 03:50 PM

குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி

May 05, 2024 02:45 PM

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM

விசேஷமாகக் கருதப்படும் இந்த தீபத்தின் மூலம் சிவபெருமான் நேரடியாக அருள்பாலிக்கிறார் எனக் கூறப்படுகிறது. தீபம் ஏற்று வழிபடும்போது சிவபெருமான் மட்டுமல்லாமல் மூன்று தேவியரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த தீபத்தின் மூலம் தீய சிந்தனைகள் நம்மை அணுகாது எனப் புராணங்கள் கூறுகின்றன. ஆன்மீகத்தின் படி குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மா, தண்டிப்பாகம் மகாவிஷ்ணு, தீபமேற்றும் இடம் சிவபெருமான் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் அரசர்கள் மற்றும் பல பக்தர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே ஆகச் சிறந்த திருப்பணியாகப் பின்பற்றி வந்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றுவதற்குச் சிறந்த நாள் ஆகும். ஒளியின் வடிவாய் காட்சி தரும் இறைவனை வழிபடச் சிறந்த நாள் ஏதும் உண்டோ என ஆன்மீகம் கூறுகிறது.

பொதுவாகவே இல்லங்களில் இரு வேலைகள் விளக்கேற்றுவது அனைத்து மங்களங்களையும் தந்து நமது வாழ்வை ஒளிமயமாக்கும் எனக் கூறப்படுகிறது.

நமது இல்லத்தில் இருக்கும் இருளை தீபஜோதி வழிபாடு மூலம் அதனை விளக்கும் வகையில் ஏழரைச் சனி, அஷ்டம சனி போன்ற அசுப பலன்கள் வராமல் தடுக்கலாம். அதேசமயம் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்று வழிபட்டால் சிவகணங்களாகி சிவனடி சேரலாம் என ஆன்மீகம் கூறுகிறது.

சிவபெருமானே மழையாய் வீற்றிருக்கும் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் போது அதைக் கண்டாலே வாழ்வில் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.