LIVE UPDATES
தமிழ்நாடு செய்திகள் October 15, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tamilnadu News Live October 15, 2024: விடாது பெய்யும் மழை..உயரும் ஏரிகளின் நீர்மட்டம் - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் என்ன?
Oct 15, 2024, 09:56 PM IST
தமிழ்நாடு செய்திகள் October 15, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tamil Nadu News Live: விடாது பெய்யும் மழை..உயரும் ஏரிகளின் நீர்மட்டம் - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் என்ன?
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் விடாது பெய்யும் மழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் பற்றி பார்க்கலாம்
Tamil Nadu News Live: TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ், தமிழ்நாட்டில் பரவலாக மழை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Tamil Nadu News Live: ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்
- இன்று இரவு முதல் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது வரை பெய்திருக்கும் கனமழையால் சென்னையில் மழை நீர் தேங்கிய காரணத்தினால் 8க்கும் மேற்பட்ட சுரங்கபாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்
Tamil Nadu News Live: கனமழை எதிரொலி! ’சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!’
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tamil Nadu News Live: ’4 மாவட்டங்களில் அதிகனமழை! 19 மாவட்டங்களில் கனமழை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- அடுத்த 24 மணி நேரத்தில். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
Tamil Nadu News Live: ’அதிமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்யத் தயார்!’ எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சூளுரை!
- வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் ன்பதில் உறுதியோடு நிற்போம்
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! களத்தில் முதல்வர்! விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: தமிழ்நாட்டில் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை, சென்னையில் மழை பாதிப்பு, அதிமுகவினருக்கு ஈபிஎஸ் அறிக்கை, தமிழக அரசுக்கு பாமக கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Tamil Nadu News Live: இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே.. உதவிகரம் நீட்டிய பிரேமலதா.. தேமுதிக அலுவலகத்தில் மக்கள் தங்கலாம்!
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழை நீரால் பாதிக்கப் பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News Live: 6 செ.மீ மழைக்கே இப்படியா? சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - ராமதாஸ் குற்றச்சாட்டு!
- 6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேக்கம், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
Tamil Nadu News Live: கனமழை எதிரொலி.. ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது - அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு!
- Online Class : கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
Tamil Nadu News Live: ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ!
- இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tamil Nadu News Live: கனமழை எதிரொலி.. கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் மக்கள்.. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்வு!
- மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த சந்தையில் இன்று தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆகிறது.
Tamil Nadu News Live: உஷார்.. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை கொட்டுமாம்!
- Heavy Rain : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu News Live: கனமழை எதிரொலி.. மீனவர்களே மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை எச்சரிக்கை!
நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu News Live: கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!
- கடந்த முறை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் நிகழாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News Live: ஸ்கூல் லீவ்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
- School Holiday : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu News Live: சென்னை மக்கள் கவனத்திற்கு.. மழை பாதிப்பு புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி!
- Weather Update : சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206-ஐ தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.