ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்

ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 15, 2024 05:26 PM IST

இன்று இரவு முதல் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது வரை பெய்திருக்கும் கனமழையால் சென்னையில் மழை நீர் தேங்கிய காரணத்தினால் 8க்கும் மேற்பட்ட சுரங்கபாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்

ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்
ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்

சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கப்பாதையில் மழை நீர் நிலவரம் தொடர்பான அப்டேட்களையும் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அப்டேட் செய்து வருகிறது.

சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் நிலவரம்

சென்னையில் விடிய விடிய மழை பெய்தபோதும் கூட, நுங்கம்பாக்கம், செனாய் நகர் உள்ளிட்ட 20 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை. எனவே இந்த சுரங்கபாதைகளில் வாகன இயக்கமானது வழக்கமாக இருந்து வருகிறது.

பெரம்பூர் சுரங்கப்பாதை மற்றும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றை வெளியேற்றும் பணிகள் விரைந்து நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் செல்ல முடியால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், வியாசர்பாடி ஸ்டீபன்சாலையில் தேங்கியுள்ள மழைநீர் சுரங்கப்பாதைக்குச் செல்வதால் சுரங்கப்பாதை 3 அடி வரை மழை நீரால் மூழ்கியுள்ளது.

 

ரெட் அலர்ட் காரணமாக போக்குவரத்தில் மாற்றம்

சென்னையில் இன்று இரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது கணேசபுரம் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துறைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சப்வே, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 8 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதில், கணேசபுரம், வில்லிவாக்கம், பெரம்பூர் மற்றும் அரங்கநாதன் உள்பட 8 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த நிலையில் இன்று (15-10-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதி கனமழை எதிரொலி அரசு முன்னறிவிப்பு

இதனால் நாளை (16.10.2024) அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள். பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருள்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

நாளை (16.10.2024) மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.