TOP 10 NEWS: ’தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! களத்தில் முதல்வர்! விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தமிழ்நாட்டில் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை, சென்னையில் மழை பாதிப்பு, அதிமுகவினருக்கு ஈபிஎஸ் அறிக்கை, தமிழக அரசுக்கு பாமக கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 84 சதவீதம் அதிகம் பெய்து உள்ளது. சென்னையில் இயல்பை விட 81 சதவீதம் அதிக மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2.சென்னையில் முதலமைச்சர் ஆய்வு
சென்னை யானை கவுனி பகுதியில் நடைபெறும் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகரிகளை அறிவுறுத்தினார்.
3.நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா?
“நாளைய தினமும் (அக்.16) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
4.தொடர்ந்து மழை நீடிக்கும்
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் அலுவலகம் வந்தவர்கள் முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது. நாளை மேலும் மழை தீவிரமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கருத்து.
5.300 நிவாரண மையங்கள் தயார்
சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்குவதால் தற்காலிகமாக 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
6.தமிழக அரசு மீது ராமதாஸ் விமர்சனம்
சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.
7.கழக வெற்றிக்காக உழைக்கிறேன்
இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியை, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
8.கன்னியாகுமரிக்கு புதிய பொறுப்பாளர்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளராக குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜாண்தங்கத்தை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
9.மக்களுக்கு பாமக தொண்டர்கள் உதவ வேண்டும்
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இடர்ப்பாட்டுக் காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை. அதன்படி மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இயன்றவரை அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் பா.ம.க.வினர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்.
10.உயிர்சேதம் கூடாது
"கனமழை காலங்களில் உயிர்சேதம் ஏற்படாத அளவுக்கு மின் விநியோகம் செய்வது முக்கியம்.. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
டாபிக்ஸ்