கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!

கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!

Divya Sekar HT Tamil
Oct 15, 2024 07:33 AM IST

கடந்த முறை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் நிகழாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!
கடந்த முறை போல இந்த முறை நடக்காது.. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி!

அதிகாரியுடன் ஆலோசனை

குறிப்பாக பள்ளிக்கரணை ஏரிக்கரைப்பகுதி மற்றும் அம்பேத்கர் சாலை கால்வாய்பாலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இந்த ஆய்வின் போது பெருமழையிலும் மழை வெள்ளநீர் செல்லக்கூடிய வழித்தடங்கள் தடைபெறாமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.

இதனை அடுத்து சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மிர்சாப்பேட்டை மார்கெட் பகுதியில் மழையின் காரணமாக சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு மேலும் கன மழை பெய்தால் சாலைகளில் நீர் தேங்காமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு உட்பட சென்னை மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “பருவக்கால மழையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மழைக்கால அவசர பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்திருந்தாலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன்.

மேலும் பல இடங்களில் நீர் வற்றிவிட்டது. இருப்பினும் இதைவிட அதிக மழை வந்தாலும் மழை நீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். அந்தப் பகுதியில் வசியக்கூடிய மக்களிடமும் அவர்களது பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்துள்ளேன்.

இந்த ஆய்வு தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.மேலும் கடந்த முறை மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.