விடாது பெய்யும் மழை..உயரும் ஏரிகளின் நீர்மட்டம் - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் என்ன?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் விடாது பெய்யும் மழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிலவரம் பற்றி பார்க்கலாம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி ஆகும். நேற்றைய நிலவரப்படி ஏரிகளில் 3,882 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து வருகின்றன. இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த ஏரிகளின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.