ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ!

ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Divya Sekar HT Tamil Published Oct 15, 2024 10:27 AM IST
Divya Sekar HT Tamil
Published Oct 15, 2024 10:27 AM IST

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ!
ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.15) ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.7,095க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) ஒரு சவரன் ரூ.56,960-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராம் ரூபாய் 103.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நேற்று (அக். 14) ஒரு கிராம் ரூ.103.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.103,000-க்கும் விற்பனையானது.

மத்திய பட்ஜெட்

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டம்

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.