விஜய், மகேஷ் பாபு படம் பேச்சு.. ட்ரோல் செய்த ரசிகர்கள்! தப்பா செல்லிட்டேன் - சாரி சொன்ன ராஷ்மிகா மந்தனா
Dec 22, 2024, 05:56 PM IST
Rashmika Mandanna: விஜய், மகேஷ் பாபு படம் பற்றி தவறான தகவலை பேசிய ராஷ்மிகா ரசிகர்கள் ட்ரோல் செய்த நிலையில், அதற்கு அவர் தனது ஸ்டைலில் க்யூட்டாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
நேஷனல் க்ரஷ் என்ற ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தனது நடிப்பில் லேட்டஸ்டாக ரிலீஸ் ஆக இருக்கும் புஷ்பா 2 படம் பெற்றிருக்கும் வெற்றியால் சந்தோஷத்தில் இருந்து வருகிறது. அத்துடன் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா இணைந்து செம குத்தாட்டம் போட்டிருக்கும் ஃபீலிங்ஸ் பாடல் வைரலாகி இருப்பதுடன், இந்த பாடலை ரீ கிரியேட் செய்து பலரும் ரீல்ஸ்கள் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா, பாலிவுட் படம் என பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இதையடுத்து பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது, தளபதி விஜய்யின் கில்லி படத்துடன் தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு படத்துடன் இணைந்து தப்பான தகவல்களை பகிர்ந்து பேசியதற்காக ரசிகர்கள் ராஷ்மிகா ட்ரோல் செய்து வருகின்றனர்.
ராஷ்மிகாவை ரோஸ்ட் செய்த ரசிகர்கள்
ராஷ்மிகா அளித்த பேட்டியில் அவரிடம் நீங்கள் அதிகம முணுமுணுக்கும், பாடி ரசிக்கும் பாடல் எது என கேட்டபோது, "எனக்கு தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் பெரிய திரையில் பார்த்த முதல் நடிகர் அவர்தான். கில்லி படத்தின் ரீமேக் தான் போக்கிரி என்பது எனக்கு சமீபத்தில் தான் தெரிந்தது. கில்லி படத்தில் இடம்பிடித்திருக்கும் அப்படிபோடு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் விஜய் - த்ரிஷாவின் நடனத்தை மிகவும் ரசித்தேன்" என பேசியுள்ளார்.
இதில் ராஷ்மிகா கில்லி படத்தின் ரீமேக் போக்கிரி என தவறான தகவலை கூறியதாக ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி ரோஸ்ட் செய்துள்ளார். கில்லி படமான மகேஷ் பாபு நடித்த சூப்பர் ஹிட் படமான ஒக்கடு ரீமேக்.
அதேபோல் மகேஷ் பாபு நடித்து சூப்பர்ஹிட்டான போக்ரி படத்தை தளபதி விஜய் தமிழில் போக்கிரி என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் முறையே அந்தந்த மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளியது. ஆனால் இந்த இரண்டு படத்தையும் இணைத்து முற்றிலும் தப்பான தகவலை பேசியுள்ளார் ராஷ்மிகா.
தப்பா செல்லிட்டேன் சாரி
ரசிகர்களின் கட்டுக்கடங்காத ட்ரோலை கவனித்த ராஷ்மிகா உண்மை தகவலை எப்படி கண்டறிந்துள்ளார். பின்னர் தான் பேசியது தவறு என்பதை உணர்ந்த பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " ஆமா.. எனக்கு தெரியும்தான். சும்மா அப்படி சொன்னேன். இண்டர்வியூ முடிஞ்ச அப்புறம் தெரிஞ்சுகிட்டேன் ஒக்கடு ரீமேக் கில்லி, போக்ரி ரீமேக் போக்கிரி படம் அப்படின்னு. சாரி. தப்பா சொல்லிட்டேன். எனக்கு எல்லா படமும் பிடிக்கும்" என க்யூட்டாக தனது ஸ்டைலில் எமோஜிகளுடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ராஷ்மிகா புதிய படங்கள்
ராஷ்மிகா மந்தனா தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
பாலிவுட்டில் சாவா படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ராஷ்மிகா. சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அத்துடன் தெலுங்கில் கேர்ள் பிரண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.