கலவரத்துக்கு மத்தியில் கோவில் விசிட் அடித்த த்ரிஷா.. பக்தியா? பயமா? நெட்டிசன்கள் கிண்டல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கலவரத்துக்கு மத்தியில் கோவில் விசிட் அடித்த த்ரிஷா.. பக்தியா? பயமா? நெட்டிசன்கள் கிண்டல்..

கலவரத்துக்கு மத்தியில் கோவில் விசிட் அடித்த த்ரிஷா.. பக்தியா? பயமா? நெட்டிசன்கள் கிண்டல்..

Malavica Natarajan HT Tamil
Published Dec 14, 2024 05:46 PM IST

கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம் செய்த நிலையில், நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

கலவரத்துக்கு மத்தியில் கோவில் விசிட் அடித்த த்ரிஷா.. பக்தியா? பயமா? நெட்டிசன்கள் கிண்டல்..
கலவரத்துக்கு மத்தியில் கோவில் விசிட் அடித்த த்ரிஷா.. பக்தியா? பயமா? நெட்டிசன்கள் கிண்டல்..

கீர்த்தி திருமணத்தில் த்ரிஷா

கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரவிக்கப்பட்ட நிலையில், இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் பங்கேற்றனர். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளான நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது தான் எங்கு பார்த்தாலும் செய்தியாக இருந்து வருகிறது.

விஜய்யை விமர்சித்த கட்சியினர்

சமீபத்தில் திருவண்ணாமலை மலைச்சரிவு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, பாதிக்கப்பட்ட களத்திற்குச் செல்லாத தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். இதை சில அரசியல் கட்சியினர் விமர்சித்தனர்.

ட்ரோலில் சிக்கிய விஜய்- த்ரிஷா

இந்நிலையில் நிவாரணம் வழங்க, மழைவெள்ளம் பாதித்த இடங்களுக்குச்செல்லாத விஜய், நடிகை திரிஷாவுடன் கோவாவிற்கு தனிவிமானத்தில் பறந்திருக்கிறார். இந்நிலையில், அதை நெட்டிசன்கள், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் பெற்ற பிள்ளைகளுக்காக போகாத விஜய், மக்களுக்காக போகாத விஜய், தனி விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

த்ரிஷா கொண்டாட்டம்

இந்த நிலையில் தான் சூர்யா 45 படத்தில் கமிட் ஆகி இருக்கும் த்ரிஷா படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளார். அங்கு நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலையில் சினிமாவில் தனது 22 ஆண்டு கால பயணம் நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோவை சூர்யா 45 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

கோவில் விசிட் அடித்த த்ரிஷா

இதற்கிடையில், கோவை படப்பிடிப்புகளுக்கு மத்தியில், த்ரிஷா மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையறிந்த ரசிகர்கள் கோவிலில் கூடிய நிலையில், இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையில், த்ரிஷாவை நெட்டிசன்கள் விஜய் உடன் இணைத்து பேசுவதால் தான் இவர் கடவுள் பக்கம் திரும்பிவிட்டார் என கிண்டலடித்து வருகின்றனர்.

பரவும் வதந்திகள்

முன்னதாக நடிகர் விஜய்யும், த்ரிஷாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்து வந்தது. மேலும், த்ரிஷாவை திருமணம் செய்வதற்காக விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. விஜய், த்ரிஷா இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் ஒன்றாக நடித்தனர். பின், விஜய்யின் கோட் படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.

விஜய்யின் அரசியல் பயணம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்து, மார்ச் 8ம் தேதி முதல் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளார்.

மாநிலம் முழுவதும் 2 கோடி பேருக்கு மெம்பர்ஷிப் வழங்கும் நோக்கில் 'தமிழக வெற்றி கழகம்' என்ற செயலியையும் விஜய் தொடங்கி வைத்தார். செயலி தொடங்கப்பட்ட 3 நாட்களில், 50 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். சமீபத்தில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் முதல் மாநாடும் மக்கள் மத்தியில் வைரலானது.