Pokkiri Troll:விஜயை அவமானப்படுத்திய சேனல்..அருவாளை தூக்க வைத்த SAC - போக்கிரி பேக்கரி ஆன கதை!-lollu sabha swaminathan latest interview about thalapathy vijay pokiri movie tamil troll - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pokkiri Troll:விஜயை அவமானப்படுத்திய சேனல்..அருவாளை தூக்க வைத்த Sac - போக்கிரி பேக்கரி ஆன கதை!

Pokkiri Troll:விஜயை அவமானப்படுத்திய சேனல்..அருவாளை தூக்க வைத்த SAC - போக்கிரி பேக்கரி ஆன கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 17, 2024 03:40 PM IST

Pokiri Troll:விஜய் டிவிக்கு வரும் விக்ரம், விஷால் போன்ற பல பிரபலங்கள் எங்களது படத்தை எப்போது லொள்ளு சபாவில் கலாய்ப்பீர்கள் என்று கேட்பார்கள்

Pokkiri Troll:விஜயை அவமானப்படுத்திய சேனல்..அருவாளை தூக்க வைத்த SAC - போக்கிரி பேக்கரி ஆன கதை!
Pokkiri Troll:விஜயை அவமானப்படுத்திய சேனல்..அருவாளை தூக்க வைத்த SAC - போக்கிரி பேக்கரி ஆன கதை!

முன் வந்து கேட்டார்கள்:

விஜய் டிவிக்கு வரும் விக்ரம், விஷால் போன்ற பல பிரபலங்கள் எங்களது படத்தை எப்போது லொள்ளு சபாவில் கலாய்ப்பீர்கள் என்று கேட்பார்கள். ஆனால், அது போக்கிரி படத்திற்கு நடக்கவில்லை. ஆம், நாங்கள் ' போக்கிரி' படத்தை 'பேக்கரி' என்று பெயர் மாற்றி, விஜய் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தை நிகழ்ச்சியில் கலாய்த்து தள்ளினோம்.

ஆம், லொள்ளு சபாவில், அந்தப் படத்தை இரண்டு பேர் தியேட்டரில் பார்ப்பது போன்று திரைக்கதை எழுதி, அதில் விஜயின் டான்ஸ், அவரது ஸ்டைல் உட்பட பல விஷயங்களை கலாய்ப்பது போன்று காட்சிகளை வடிவமைத்து இருந்தோம். அது உண்மையிலேயே அவரை நேரடியாக கலாய்ப்பது போல அமைந்து விட்டது.

கோபத்தில் கொந்தளித்த எஸ். ஏ.சி

இதையடுத்து, விஜயின் அப்பாவான சந்திர சேகரிடமிருந்து எங்களுக்கு போன் வந்தது. யார் அந்த நிகழ்ச்சியை டைரக்ட் செய்தது.. எல்லோரும்... வெளியே வந்து விடுங்கள்... விஜயின் ரசிகர்கள் இதனால் மிகவும் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட ஊரைச் சேர்ந்த ரசிகர்கள் அருவாளை தூக்கிக்கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள். பெரிய பிரச்சினை ஆகிவிட்டது என்று பயமுறுத்தி விட்டார்.

அதை இயக்கிய ராம் பாலா சந்திர சேகரிடம் நான் அதை செய்யவில்லை. என்னுடைய உதவி இயக்குனர்கள் தான் செய்தார்கள் என்று சொல்லி நழுவ முயற்சி செய்தார். ஆனால் அவர் விடுவதாக இல்லை எல்லோரும் வந்து விடுங்கள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார். அதன் பின்னர் ஒரு வழியாக அந்த பிரச்சினை முடிந்தது.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.