ஸ்ரீவள்ளி இதயத்திற்கு நெருக்கமானவள்! நடிகை ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி பதிவு!
புஷ்பா 2 படத்தின் சூட்டிங் போட்டோக்களை ராஷ்மிகா மந்தனா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவரது ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்தான மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பான் இந்தியா படங்கள் வரிசையில் கடந்த டிசம்பர் 5 அன்று வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரூ.500 கோடி வசூலை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங் போட்டோக்களை ராஷ்மிகா மந்தனா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவரது ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்தான மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் வெற்றி
கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கில் வெளியாகும் கணிசமான படங்கள் பான் இந்தியா படமாக பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த வரிசையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. தெலுங்கு திரையுலகின் அக்மார்க் மசாலா படமாக உருவாகி இருந்த புஷ்பா 1 சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளிக் குவித்து இருந்தது. தமிழ்நாட்டிலும் இப்படம் அதிக வசூலை பெற்று இருந்தது.
இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் சுனில், அஜய் கோஷ், ராஜ் திராண்டுசு ஆகியோர் உட்பட பலரும் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் அல்லு அர்ஜூனிற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படமும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.