20 Years of Ghilli : கில்லி படத்தின் ஹீரோ, ஹீரோயினாக முதலில் தேர்வானவர்கள் யார் தெரியுமா?
20 Years of Ghilli : ‘செல்லம் ஐ லவ் யூ’ பிரகாஷ் ராஜ்; ‘கபடி கபடி’ விஜய்! அனல் பறந்த கில்லியை மறக்க முடியுமா?

இருபது ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் (17.04.2024) வெளியான திரைப்படம் கில்லி. பெயருக்கு ஏற்றாற்போல் புயல் கிளப்பிய படம்தான் கில்லி. இயக்கம் மற்றும் திரைக்கதை தரணி. பரபரப்பான திரைக்கதை, படம் துவங்கியது முதல் முடியும் வரை ஒரு இடத்தில் கூட தொய்வு இருக்காது. பரபர காட்சிகள் பரவசப்படுத்தும். காதல் காட்சிகள் கவரும் வகையில் இருக்கும். படம் முழுவதுமே அனல் கிளப்பிய அனைவரும் ரசித்த ஒரு படமாக கில்லி இருந்தது.
வேலு, கட்டுப்பாடான போலீஸ்கார தந்தையின் வாழ்வை கொண்டாடும் மகன். அம்மா மற்றும் தங்கை என அழகான குடும்பம். தேர்வில் சரியாக தேர்ச்சி பெறவேண்டும் என்று வேலுவின் தந்தை வலியுறுத்திக்கொண்டே இருப்பார். ஆனால் வேலுவுக்கோ ஆர்வம் கபடியில்.
அதுபோன்றதொரு கபடி போட்டிக்காக மதுரை செல்வார். அங்குதான் கதை துவக்கம். அந்த ஊரின் அடாவடி ரவுடி முத்துப்பாண்டி. தனலட்சுமியை துரத்தி துரத்தி காதலிப்பார். அவரை சந்திக்கும்போதெல்லாம் அவர் பேசும் காதல் வசனம் ‘செல்லம் ஐ லவ் யூ’ இது மிகவும் பிரபலமான வசனமாக இன்றளவும் உள்ளது.
