ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்
ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்.. இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவுசெய்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படம் பற்றிப்பார்ப்போம்.

2006ஆம் ஆண்டு, டிசம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம், திருவிளையாடல் ஆரம்பம். இப்படத்தினை பூபதி பாண்டியன் இயக்க, நடிகர் தனுஷ், ஸ்ரேயா, கருணாஸ்,சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் கமர்ஷியலாக 100 நாட்கள் ஓடி நடிகர் தனுஷ் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படத்திற்கு முதலில் திருவிளையாடல் என்று சிவாஜி கணேசன் நடித்த பழைய படத்தின் பெயர் தான் வைத்தனர். இதனை அறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேனின் ரசிகர்கள், புதிய படத்திற்கும் இதே பெயர் வைத்தால், சிவாஜி கணேசன் படத்திற்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் எனக்கருதி, படத்தின் பெயரை மாற்றக்கோரி தயாரிப்பாளர் விமலா கீதாவிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று இப்படம் திருவிளையாடல் ஆரம்பம் எனப்பெயர் வைக்கப்பட்டது.
திருவிளையாடல் ஆரம்படம் படத்தின் கதைக்கரு என்ன?:
இப்படத்தில் திருக்குமரன்(தனுஷ்) எதையும் மிக ஜாலியாக எடுத்துக்கொள்ளும் லைட் ஹார்ட் இளைஞர். தனது நண்பர்களான டைகர் குமார்(கருணாஸ்), சுகுமார் மற்றும் ஏனையோருடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பணக்காரப் பெண்ணான பிரியாவை(ஸ்ரேயா) கோயிலில் பார்த்ததும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் எனும் மொமண்டில் காதல் செய்கிறான். அதற்காக அவரது வீட்டு வாசலில் சென்று, சிசிடிவி முன்பு வித்தியாசமாகப் பேசி, இம்ப்ரெஸ் செய்கிறான். எப்படியோ, அவளை தன்வசம் கொண்டு வருகிறான்.