தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சைவ, வைணவ ஒற்றுமை கூறும் திருமலை மகாதேவர்!

சைவ, வைணவ ஒற்றுமை கூறும் திருமலை மகாதேவர்!

Aug 15, 2022, 07:09 PM IST

முஞ்சிரை திருமலை மகாதேவர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
முஞ்சிரை திருமலை மகாதேவர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

முஞ்சிரை திருமலை மகாதேவர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் முஞ்சிரை பகுதியில் திருமலை மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. மகா 12 சிவாலயங்களைச் சைவ, வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் முதல் சிவாலயமாக உள்ளது இந்த கோயில்.

சமீபத்திய புகைப்படம்

குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது

May 05, 2024 03:57 PM

பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்

May 05, 2024 03:50 PM

குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி

May 05, 2024 02:45 PM

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM

பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்.. பணக்காரராக மாறப் போவது உறுதி.. உங்க ராசி என்ன?

May 05, 2024 12:11 PM

குரு கேரண்டி கொடுக்கிறார்.. அஸ்தமனத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளை தடுக்க முடியாது..!

May 05, 2024 11:51 AM

பண்டைய காலத்தில் சீதையை ராவணன் முதலில் சிறை வைத்ததும் இந்த இடம் என்றும், இத்தலத்தில் ராமர் வழிபட்டார் என்றும் கூறப்படுகிறது. இக்கோயிலின் வளாகத்தில் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் விஷ்ணு கோயிலும் அமைத்துள்ளது.

பதினோராம் நூற்றாண்டில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் கலைநயமிக்க சிற்பங்களும் கல் தூண்களும் கோயிலின் உள்பகுதியில் மரத்தாலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த நவகிரக மண்டபமும் காணப்படுகின்றது.

இங்கு மூலவராக மகாதேவரும், அடுத்தபடியாக திருமலை மகாவிஷ்ணுவும் கணபதி, சாஸ்தா, நாகராஜா போன்ற விக்ரகங்களும் உள்ளன. இங்குக் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலின் விழுப்புரம் ஒன்றும் அதனைச் சுற்றி மூன்று குளங்கள் எனக் கோயிலைச் சுற்றி நான்கு குளங்கள் காணப்படுகின்றன.

பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. அதிலும் ஒரே நேரத்தில் மகாதேவருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இரு கோயில்களிலும் கொடியேற்று விழா நடப்பது சிறப்புடைய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்குத் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரள மாநில பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.