தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sabarimala: சபரிமலையில் கேபிள் கார் - புதிய ஒப்பந்தம்

Sabarimala: சபரிமலையில் கேபிள் கார் - புதிய ஒப்பந்தம்

May 21, 2023, 07:01 PM IST

சபரிமலையில் பொருட்கள் கொண்டு செல்வதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணி ஒப்பந்தமாகி உள்ளது.
சபரிமலையில் பொருட்கள் கொண்டு செல்வதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணி ஒப்பந்தமாகி உள்ளது.

சபரிமலையில் பொருட்கள் கொண்டு செல்வதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணி ஒப்பந்தமாகி உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகக் கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம். மலையேறி ஐயப்பன் வழிபடுவதற்காகவே இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி

May 05, 2024 02:45 PM

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM

பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்.. பணக்காரராக மாறப் போவது உறுதி.. உங்க ராசி என்ன?

May 05, 2024 12:11 PM

குரு கேரண்டி கொடுக்கிறார்.. அஸ்தமனத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளை தடுக்க முடியாது..!

May 05, 2024 11:51 AM

குரு கிருத்திகையில் புரட்டி எடுப்பார்.. அதிர்ஷ்டத்தை 3 ராசிகளுக்கு பிரித்துக் கொடுக்க போகிறார்.. 10 ஆண்டு பலன்கள்

May 05, 2024 09:33 AM

Bad Luck Rasi : இந்த ராசிக்காரர்களுக்கு இது கடினமான நேரம்.. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு.. நிதானம் தேவை!

May 05, 2024 06:30 AM

இந்த கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக அடிவாரமான பம்பையில் இருந்து டிராக்டர் மூலம் கோயிலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த டிராக்டர்கள் மலைப் பாதையில் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோயிலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல கேபிள் கார் திட்டம் செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டக் குறித்து உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கேபிள் கார் அமைக்க அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் கிடைத்த பிறகு கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மண் ஆய்வுப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த மண்ணாய்வு பணி முடிந்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்