தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Bonda : வேகவைத்த முட்டையில் இப்படி ஒரு போண்டா செய்து பாருங்கள்! சூப்பரான ஸ்னாக்ஸ்!

Egg Bonda : வேகவைத்த முட்டையில் இப்படி ஒரு போண்டா செய்து பாருங்கள்! சூப்பரான ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 12:54 PM IST

Egg Bonda : முட்டையில் கலோரிகள் குறைவு, புரதம் அதிகம் உள்ளதால், எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதை சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. பசியை குறைக்கிறது.

Egg Bonda : வேகவைத்த முட்டையில் இப்படி ஒரு போண்டா செய்து பாருங்கள்! சூப்பரான ஸ்னாக்ஸ்!
Egg Bonda : வேகவைத்த முட்டையில் இப்படி ஒரு போண்டா செய்து பாருங்கள்! சூப்பரான ஸ்னாக்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து (நறுக்கியது)

கொத்தமல்லி இலை - கைப்பிடியளவு (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகு தூள் – அரை ஸ்பூன்

சீரக தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

கடலை மாவு – ஒரு கப்

செய்முறை -

முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் நறுக்கிய முட்டையை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவேண்டும்.

பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவேண்டும்.

பிறகு கடலைமாவு சேர்த்து கலந்துவிடவும், பின்பு தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் முட்டை மசாலா கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

முட்டையின் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது

முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான முக்கிய சத்து என்றால் அது புரதம் தான் அதுதான் உடலை நன்றாக கட்டமைக்க உதவுகிறது. உடல் வலிமை மற்றும் திசுக்கம் மற்றும் தசைகளை சரிசெய்கிறது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரதச்சத்து உள்ளது.

முட்டையில் முக்கிய அமினோஅமிலங்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தசைகளை நன்றாக பராமரிக்கவும், அதன் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது

உடலில் அதிக அடர்த்திகொண்ட லிப்போபுரதச்சத்துக்கள் என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

உடலில் குறைவான அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின் என்ற கெட்ட கொழுப்பு நமது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை கொடுக்கிறது. எண்ணெயில் பொரித்த உணவுகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது

முட்டையின் மஞ்சள் கருவில் இயற்கையிலே வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 2 முட்டை எடுத்துக்கொண்டாலே உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 82 சதவீத வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் டி உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கிறது. வைட்டமின் டி ஆரோக்கியமான பற்கள் மற்றும் எழும்புகளை உருவாக்க உதவுகிறது. வைட்டமின் டி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

முட்டை வயிறை நிரப்பும் அதனால், எடை பராமரிப்பில் உதவுகிறது

முட்டையில் கலோரிகள் குறைவு, புரதம் அதிகம் உள்ளதால், எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதை சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. பசியை குறைக்கிறது.

முட்டை உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. சாப்பிட்டபின் திருப்தியான உணர்வை கொடுக்கிறது.

கோலீன்கள் கொண்டது

கல்லீரலில் சுரக்கும் கோலீன்கள், உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து. சிலருக்கு ஒரு நாளைக்கு தேவையான கோலீன்கள் கிடைக்காது. பி வைட்டமின்களைப்போல், கோலீன், வழக்கமாக செல்கள் இயங்குவதற்கு உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு நினைவாற்றல் திறன் வளரவும், பெரியவர்களுக்கு நினைவாற்றல் இழப்பை குறைக்கவும் கோலீன்கள் உதவுகின்றன.

ஒமேகா -3 நிறைந்தது

ஒமேகா – 3 சிறப்பான பாலிஅன்சாச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் ஆகும். இது முக்கிய கொழுப்பு குடும்பத்தை சேர்ந்தது. செல் மெம்மரைன்கள் இயங்கள் இது உதவுகிறது. இது இதயம், மூளை ஆரோக்கியம், கண் பார்வை குறைபாடு ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது. உங்கள் உடல் குறிப்பிட்ட அளவு ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது. எனவே அவற்றை நாம் வெளியில் இருந்து அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டையில் இயற்கையிலே ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இரண்டு முட்டையில் 180 கிராம் இந்த சத்து உள்ளது. எண்ணெய் நிறைந்த மீனில், ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. மீன் பிடிக்காதவர்களுக்கு முட்டை நல்ல தேர்வு.

கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் இ, செலினிய சத்துகள் நிறைந்துள்ளது. இது கண்கள் ஆரோக்கியம் மற்றும் ரெட்டினாவின் இயக்கத்துக்கு உதவுகிறது. வயோதிகத்தால் ஏற்படும் பார்வையிழப்பை தடுக்கிறது.

இதில் லியூடின், செக்ஸாத்தின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சில கண் கோளாறுகளை சரிசெய்கின்றன. கண் புரை நோய் ஏற்படாமல் தடுக்கின்றன.

முட்டை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அத்துடன் மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும் முட்டைகள் உதவுகின்றன. இதில் உள்ள வைட்டமின் பி, பி12, கோலீன், இரும்புச்சத்து மற்றும் டிரிப்டோஃபான்கள், பதற்றத்தை குறைக்க உதவுகிறது. இது மனஅழுத்த அறிகுறைகளைப்போக்கி, தூக்கத்தை அதிகரிக்கிறது.

WhatsApp channel