RCB vs CSK Innings Break: முதல் பாதி சிஎஸ்கே, இரண்டாம் பாதி ஆர்சிபி! கடைசி 10 ஓவரில் மட்டும் 140 ரன்கள்
RCB vs CSK Innings Break: முதல் பாதியில் சிஎஸ்கே வசம் இருந்த ஆட்டம், பின்னர் இரண்டாம் பாதியில் அது அப்படியே ஆர்சிபி வசம் சென்றது. சிஎஸ்கே பவுலர்களை ஆர்சிபி பேட்மேன்கள் வெளுத்து வாங்கிய 218 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 68வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறும் என்பதால், இதுவொரு நாக்அவுட் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்கும் இந்த சீசனின் கடைசி போட்டியாக இது அமைந்துள்ளது.
அத்துடன் இந்த சீசனில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாகவும், முக்கியமான போட்டியாகவும் உள்ளது. தற்போதையை நிலையில் ஆர்சிபி 13 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், சிஎஸ்கே 13 போட்டிகளில் 7 வெற்றியுடன், நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
இந்த சீசனின் முதல் போட்டியே சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
சிஎஸ்கே பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் அடித்துள்ளது.
அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 54, விராட் கோலி 47, ராஜத் பட்டிதார் 41, கேம்ரூன் க்ரீன் 38 ரன்கள் அடித்துள்ளனர். சிஎஸ்கே பவுலர்களில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
மழை குறுக்கீடு
ஆர்சிபி அணியின் ஓபனர்களான விராட் கோலி - கேப்டன் டூ ப்ளெசிஸ் தெறிக்கவிடும் விதமாக அதிரடி தொடக்கத்தை தந்தனர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு மைதானத்தை அதிரவைத்தார் கோலி.
3 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 31 என இருந்தபோது மழைக்குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சுமார் 30 நிமிடங்களை வரை தாமதமானது.
இதன்பின்னர் மீண்டும் தொடங்கிய போட்டியில், பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக சிறிது நேரம் செயல்பட்டது., இதனால் சிஎஸ்கே ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சிரமம் அடைந்தனர். ரிஸ்க் எடுத்து விளையாடிய கோலி அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்தார்.
29 பந்துகளில் 47 ரன்கள் அடித்த கோலி, சாண்ட்னர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
டூ பிளெசிஸ் அரைசதம்
தொடக்கத்தில் மெதுவாக ரன் அடித்தாலும், பின்னர் 10வது ஓவருக்கு பின் பிட்ச் மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக செயல்பட அதிரடியை காட்டினார் டூ பிளெசிஸ். விரைவாக ரன்களை விளாசிய அவர் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.
ஆர்சிபி அணி கடைசி 10 ஓவரில் மட்டும் 140 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.