Hardik Pandya Banned: ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை! கணிவு காட்டாத பிசிசிஐ - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான சீசன்
Hardik Pandya Banned: மும்பை அணிக்கு ஐபிஎல் 2024 மோசமான சீசன் என்ற சோகம் ஒரு புறம் இருக்க, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை விதித்து மற்றொரு இடியை இறக்கியுள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 14 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் 10 அணிகள் ஆன பிறகு இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியின் இந்த மோசமான நிலை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹார்திக் பாண்ட்யாவுக்கு தடை
இந்த சூழ்நிலையில் மற்றொரு இடியாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அடுத்த சீசனில் முதல் போட்டியை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் குறித்த நேரத்தில் பவுலிங் செய்து முடிக்காமல் இருந்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. இது ஐபிஎல் நடத்தை விதிமீறலாக இருப்பதுடன், மூன்றாவது முறையாக அவர் இந்த தவறில் ஈடுபட்டுள்ளார்.\