தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rcb Playoff Scenario: அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லயே!ஆர்சிபி தகுதி பெற என்ன செய்யனும்!புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்

RCB Playoff Scenario: அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லயே!ஆர்சிபி தகுதி பெற என்ன செய்யனும்!புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 18, 2024 05:00 PM IST

RCB Playoff Scenario: மே 18ஆம் தேதி விளையாடிய போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்ததே இல்லை. அதுமட்டுமில்லாமல் சிஎஸ்கே வீழ்த்தி ப்ளேஆஃப்புக்கு ஆர்சிபி தகுதி பெற என்ன செய்யனும் என்பதை ரசிகர்கள் இணையத்தில் புட்டு புட்டு வைக்கிறார்கள்.

ஆர்சிபி தகுதி பெற என்ன செய்யனும்ன்னு புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்
ஆர்சிபி தகுதி பெற என்ன செய்யனும்ன்னு புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியை வெல்லும் அணி நான்காவது அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பை தட்டி செல்லும். எனவே இந்த போட்டி ஒரு நாக் அவுட் ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கேவை விட ஆர்சிபிக்கு சவால்

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் வென்றால் மட்டுமே போதுமானது. அப்படியே தோல்வி அடைந்தாலும் ரன்ரேட்டுக்கு பாதகம் இல்லாத அளவில் ஆர்சிபியை கடை ஓவர் வரை பேட் செய்யவோ அல்லது குறைவான ரன்களிலோ தோல்வி அடைந்தாலும் ப்ளேஆஃப்பில் நுழைய முடியும்.

ஆனால் ஆர்சிபியை பொருத்தவரை முதல் பேட்டிங் செய்தால் சென்னை சூப்பர் கிங் ணிக்கு எதிராக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். அதேநேரம் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 18.1 ஓவரில் சிஎஸ்கே நிர்ணயிக்கும் இலக்கை சேஸ் செய்ய வேண்டும். எனவே இவற்றில் ஏதாவது ஒன்றை செய்தால் மட்டுமே ஆர்சிபி ப்ளேஆஃப் வாய்ப்பை பெற முடியும் என்பதால் அந்த அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

இதற்கிடையே பெங்களுருவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 சதவீதம் வரை இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆர்சிபிக்கு வருண பகவானும் வழி விட வேண்டிய சூழல் உள்ளது. மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் வாய்ப்பு சிஎஸ்கேவுக்தான்.

மழை வந்தாலும் ஆர்சிபி தப்பிக்க வழி என்ன

இந்த சூழ்நிலையில் மழை வந்து போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டாலோ அல்லது ரன்கள் மாற்றியமைக்கப்பட்டாலே ஆர்சிபி அணி எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற விவரத்தை ரசிகர்கள் புட்டு புட்டு வைத்துள்ளனர்.

ஆர்சிபி அணியின் நிர்வாகமே இந்த டீடெயிலை பார்த்து மிரண்டு போகும் அளவில் 20 ஓவர் போட்டியானது குறைந்தது 5 ஓவராக போட்டியாக நடைபெற்றால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி ஒவ்வொரு ஓவருக்கும் அடிக்க வேண்டிய ரன்கள், கட்டுப்படுத்த வேண்டிய ரன்கள் வாரியான விவரத்தை வெளியிட்டுள்ளனர். ஆர்சிபி அணி தப்பிக்கும் வழியாக அமைந்திருக்கும் இந்த விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆர்சிபிக்கு மற்றொரு அதிர்ஷ்டம்

இது ஒரு புறம் இருக்க ஆர்சிபி அணி\யின் கடந்த கால வரலாறை குறிப்பிட்டு, அந்த அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என நம்புவதாகவும் பலர் குறிப்பிட்டு வருகிறார்கள். அதாவது ஐபிஎல் தொடரில் இதற்கு முன் மே 18ஆம் தேதி விளையாடிய போட்டிகளில் ஆர்சிபி ஒரு முறை கூட தோல்வி அடைந்ததே இல்லையாம்.

2013, 2014 ஆகிய சீசன்கள் இதே தேதியில் சிஎஸ்கே அணியையும், 2016இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2023இல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தியுள்ளது. எனவே மே 18 லக் ஆர்சிபியை தொடரும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தரமான கம்பேக்

இந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்ற ஆர்சிபி, அடுத்து விளையாடிய 6 போட்டிகளில் 5 தொடர் வெற்றிகளை பெற்று மற்ற அனைத்து அணிகளையும் பின்னுக்கு தள்ளி கம்பேக் கொடுத்துள்ளது. எனவே வெற்றி பார்மை இந்த போட்டியிலும் தொடர முழு முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024