MI vs LSG Result: ரோகித் ஷர்மா அதிரடி, நமன் திர் வானவேடிக்கை! தோல்வியுடன் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ்
MI vs LSG Result: ஓபனிங்கில் ரோகித் ஷர்மா அதிரடி, பினிஷிங்கில் இளம் பேட்ஸ்மேன் நமன் திர் வானவேடிக்கையாக மும்பை இந்தியன்ஸ் வெற்றியை நோக்கி சென்று, தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 67வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் கடைசி போட்டியாக இது அமைந்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 13 போட்டிகளில் 4 வெற்றி, 8 புள்ளியுடன் கடைசி இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் இருந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் மோதலில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டிவால்ட் பிரீவிஸ், அர்ஜுன் டென்டுல்கர், ரோமரியோ ஷெப்பர்டு, நுவன் துஷாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், மேட் ஹென்றி, மோக்சின் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த சீசனில் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் அர்ஜுன் டென்டுல்கர்.
