Benefits of Toor Dal : தினம் ஒரு தானியம்! அன்றாட உணவுதான்; ஆற்றலை அள்ளிக்கொடுக்கும் துவரம் பருப்பின் நன்மைகள் என்ன?
Benefits of Toor Dal : தினம் ஒரு தானியம்! அன்றாட உணவுதான்; ஆற்றலை அள்ளிக்கொடுக்கும் துவரம் பருப்பின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு கப் துவரம் பருப்பில் 343 கலோரிகள், மொத்த கொழுப்பு 1.5 கிராம், கார்போஹைட்ரேட் 63 கிராம், புரதச்சத்து 22 கிராம், சோடியம் 17 மில்லி கிராம், பொட்டாசியம் 1392 மில்லி கிராம், கால்சியம் 0.13 மில்லி கிராம், இரும்புச்சத்து 28 சதவீதம், மெக்னீசியம் 45 சதவீதம், வைட்டமின் பி6 15 சதவீதம் உள்ளது.
துவரம் பருப்பில் உள்ள நன்மைகள்
நல்ல தரமான புரதச்சத்துக்கள் நிறைந்தது. அது உடலை வலுப்புடுத்த உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியையும், உடல் நலனையும் கொடுக்கிறது. இதை தானியங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்கு தேவையான மொத்த புரதச்சத்தும், முக்கிய அமினோ அமிலங்களும் கிடைக்கிறது. தசைகளை வலுப்படுத்துகிறது. திசுக்களை சரிசெய்கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்தை இந்த பருப்பு வழங்குகிறது.
ஃபோலிக் ஆசிட் நிறைந்தது
பருப்பு ஃபோலிக் ஆசிட் நிறைந்தது. இது கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் ஃபோலிக் ஆசிட்டின் தேவை அதிகரிக்கிறது. இது குழந்தைகளை தண்டுவடம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற பிறவிக்கோளாறுகளில் இருந்து காக்கிறது. துவரம் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்வது கர்ப்பிணிகளுக்கு கர்ப்பம் கலையாமல் இருக்கவும், குறை மாதத்தில் பிரசவம் நடக்காமல் இருக்கவும், அனீமியா ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.