Kavya Maran Net Worth: ஐபிஎல் க்யூட் Doll காவ்யா மாறன் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Kavya Maran Net Worth: சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே உறுதியாக கூறலாம். சன் ரைசர்ஸ் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பு கவனத்தை பெறுபவராக இருந்து வரும் இவர், போட்டியில் தனது க்யூட் முகபாவனைகளால் ரசிகர்களின் மனதை கவர்பவராக உள்ளார்
(1 / 5)
சன் ரைசர்ஸ் அணியின் சிஇஓ மற்றும் பார்டனராக இருக்கும் காவ்யா, சன் ரைசர்ஸ் அணியின் சில துணிச்சலான முடிவுகளுக்கு பின்புலமாக இருப்பதுடன், அணியினரை கூட்டாக அழைத்து செல்வதில் முக்கிய பங்காற்றுகிறார்
(2 / 5)
சன் ரைசர்ஸ் அணிக்கான தனது பொறுப்பை 2018ஆம் ஆண்டில் எடுத்துக்கொண்டார் காவ்யா மாறன் .யுகேவில் எம்பிஏ முடித்திருக்கும் காவ்யா மாறன், தனது தந்தை கலாநிதி மாறனுடன் இணைந்து சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்
(3 / 5)
தனது பிரதான பிஸ்னஸுடன், ஐபிஎல் மூலம் ஆண்டுதோறும் மிக பெரிய அளவில் வருமானத்தை ஈட்டுகிறார். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ. 409 கோடியாக உள்ளது. காவ்யா மாறனின் தந்தை தயாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ. 19 ஆயிரம் கோடி இருக்கும் கூறப்படுகிறது
(4 / 5)
காவ்யா மாறனின் சன் ரைசர்ஸ் அணி, ஐபிஎல் 2024 தொடரின் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை அற்புதமான ஆட்டத்தை சன் ரைசர்ஸ் வெளிப்படுத்தியுள்ளது
மற்ற கேலரிக்கள்