RCB vs CSK Toss: ப்ளே ஆஃப்புக்கான யுத்தம்! சிஎஸ்கே, ஆர்சிபி அணியில் முக்கிய மாற்றம்
RCB vs CSK Toss: ப்ளே ஆஃப்புக்கான யுத்தமாக அமைந்திருக்கும் இந்த போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 68வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறும் என்பதால், இதுவொரு நாக்அவுட் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இந்த சீசனின் கடைசி போட்டியாக இது அமைந்துள்ளது. அத்துடன் இந்த சீசனில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாகவும், முக்கியமான போட்டியாகவும் உள்ளது. தற்போதையை நிலையில் ஆர்சிபி 13 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், சிஎஸ்கே 13 போட்டிகளில் 7 வெற்றியுடன், நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
இந்த சீசனின் முதல் போட்டியே சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.