ஆசிய கோப்பை வெற்றி பெற்ற அணிகள்

வெற்றியாளர்கள்


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை வெற்றி பெற்ற அணிகள் குறித்த விவரங்களை பார்ப்போம். ஆசியக் கோப்பையின் (Asia Cup) முதல் எடிஷன் 1984 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் ரவுண்ட் ராபின் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றது.முதல் போட்டி பாகிஸ்தானுக்கும் புதிய ஐசிசி உறுப்பினரான இலங்கைக்கும் இடையே நடந்தது. முதல் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் தனது இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் நாடு திரும்பியது. அதைத் தொடர்ந்து, 1986-இல் நடந்த ஆட்டத்தில் இலங்கை சாம்பியன் ஆனது. பின்னர், 1988, 1990, 1995 என தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றது. 1997-இல் இலங்கையும், 2000-இல் பாகிஸ்தானும் சாம்பியன் ஆனது. 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்ச்சியாக சாம்பியன் ஆனது. பின்னர் 2010- இல் இந்தியாவும், 2012-இல் பாகிஸ்தான் 2-வது முறையாகவும் சாம்பியன் ஆனது. 2014-இல் இலங்கையும், 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவும் ஜெயித்தது. 2016-இல் டி-20 வடிவில் ஆசிய கோப்பை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டி20 வடிவில் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. அதில் இந்தியா தான் ஜெயித்தது. 2022-இல் டி-20 வடிவில் மீண்டும் நடத்தப்பட்ட போட்டியில் இலங்கை சாம்பியன் ஆனது. அந்த வகையில், நடப்பு சாம்பியனாக இலங்கை உள்ளது. அதிகபட்சமாக இதுவரை இந்தியா 7 தடவையும், இலங்கை 6 முறையும் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைகளில் ஏந்தியிருக்கிறது. இது டி20, ஒரு நாள் இரண்டு வடிவங்களையும் சேர்த்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மொத்தம் 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. அந்த அணி கடைசியாக 2012இல் தான் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. 1990-91 காலகட்டத்தில் நான்காவது எடிஷன் இந்தியாவில் நடைபெற்றது. இந்தியாவுடனான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டதால் பாகிஸ்தான் போட்டியிலிருந்து விலகியது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆசியக் கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 1993-ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. ஐந்தாவது எடிஷன், 1995-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் நடந்தது. முதல் சுற்றுக்குப் பிறகு மூன்று அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றிருந்ததால், பாகிஸ்தானை விட சிறந்த ரன்-ரேட் காரணமாக இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆறாவது எடிஷன் 1997-இல் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை தனது இரண்டாவது ஆசியக் கோப்பையை வென்றது. ஐக்கிய அரபு அமீரகம் (1984, 1995, 2018, 2022) இலங்கை (1986, 1997, 2004, 2010, 2023), வங்கதேசம் (1988, 2000, 2012, 2014, 2016), இந்தியா (1990/91), பாகிஸ்தான் (2008, 2023). பிரதான போட்டியில் எந்தெந்த அணிகள் எப்போது ஆசிய கோப்பையில் அறிமுகமானது என பார்ப்போம்.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை 1984-ஆம் ஆண்டும், வங்கதேசம் 1986-ஆம் ஆண்டும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங் காங் ஆகிய அணிகள் 2004-ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தான் 2014-ஆம் ஆண்டிலும், நேபாளம் 2023-ஆம் ஆண்டிலும் அறிமுகமாகின. 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் ஆசிய கிரிக்கெட் மாநாடாக (Asian Cricket Conference) ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதன் ஒரிஜினல் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் என்னவென்றால், ஆசிய கண்டத்தில் கிரிக்கெட்டை ஒழுங்கமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை ஆகும். வங்கதேசம், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகியவை ஏசிசி-யின் நிறுவன உறுப்பினர்களாகும். பின்னர் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் ஹாங்காங், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதைத் தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டில் நேபாளம் உறுப்பினர்களாகின. 2004- ஆம் ஆண்டில் ஏ.சி.சி-யில் சீனா இணைந்தது. இந்த ஆண்டு (2023) நேபாளம் இணைந்துள்ளது. 1993-ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் மாநாடு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலாக (Asian Cricket Council) மாறியது. ஏ.சி.சி-யில் முழு மற்றும் அசோசியேட் என இரண்டு வகை உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.சி.சி அசோசியேட் நாடுகள் ஹாங்காங், குவைத், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஆகும். டெஸ்ட் விளையாடும் நாடுகள், முழு நாடுகள் ஆகும். விளையாட்டை விரிவுபடுத்துவதும், அதை தைரியமாக புதிய பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதும், அதன் மூலம் விளையாட்டை உண்மையிலேயே உலகமயமாக்குவதும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் உறுதியான கொள்கையாகும். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உண்மையான நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக வளர்ச்சி நடவடிக்கைகள் போட்டிகளுடன் கைகோர்த்து செல்கின்றன. ஃபிஜி, ஜப்பான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்து இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இருப்பினும், அந்தப் பிராந்தியத்தில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கியதைத் தொடர்ந்து, இந்த நாடுகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மெம்பர்ஷிப்பை விட்டுக் கொடுத்தன. 1999-ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து நிர்வாக பதவிகளும் கவுரவப் பதவிகளாக இருந்தன. கடந்த, 1999-ஆம் ஆண்டு முதல், செயலர், பொருளாளர் பதவி வகிப்பவர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். 2003-ஆம் ஆண்டு வரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் அதன் தலைவர் மற்றும் செயலாளரின் சொந்த நாடாக இருக்கும் என சுழற்சி முறையில் இருந்து வந்தது. 2003-ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிரந்தர தலைமையகமாக மலேசியாவின் கோலாலம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போதைய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவுரவச் செயலாரகாவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23 ஆசியக் கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமையை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பாகிஸ்தானில் உள்ள பிடிவி மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களும் பெற்றுள்ளன.

YearWinnerRunner UpPlayer of the SeriesVenue
2022RunnerUp LogoSri LankaSL170/6RunnerUp LogoPakistanPAK140/10Bhanuka Rajapaksa (Sri Lanka)Dubai
2018RunnerUp LogoIndiaIND223/7RunnerUp LogoBangladeshBAN222/10Shikhar Dhawan (India)Dubai
2016RunnerUp LogoIndiaIND122/2RunnerUp LogoBangladeshBAN120/10Sabbir Rahman (Bangladesh)Dhaka
2014RunnerUp LogoSri LankaSL261/5RunnerUp LogoPakistanPAK260/10Lahiru Thirimanne (Sri Lanka)Dhaka
2012RunnerUp LogoPakistanPAK236/9RunnerUp LogoBangladeshBAN234/8Shakib Al Hasan(Bangladesh)Dhaka
2010RunnerUp LogoIndiaIND268/6RunnerUp LogoSri LankaSL187/10Shahid Afridi (Pakistan)Dambulla
2008RunnerUp LogoSri LankaSL273/7RunnerUp LogoIndiaIND173/10Ajantha Mendis (Sri Lanka)Karachi
2004RunnerUp LogoSri LankaSL228/9RunnerUp LogoIndiaIND203/9Sanath Jayasuriya (Sri Lanka)Colombo
2000RunnerUp LogoPakistanPAK277/4RunnerUp LogoSri LankaSL238/10Mohammad Yousuf (Pakistan)Dhaka
1997RunnerUp LogoSri LankaSL240/2RunnerUp LogoIndiaIND239/7Arjuna Ranatunga (Sri Lanka)Colombo
1995RunnerUp LogoIndiaIND233/2RunnerUp LogoSri LankaSL230/7Navjot Sidhu (India)Sharjah
1990-91RunnerUp LogoIndiaIND205/3RunnerUp LogoSri LankaSL204/9N/AKolkata
1988RunnerUp LogoIndiaIND180/4RunnerUp LogoSri LankaSL176/10Navjot Sidhu (India)Dhaka
1986RunnerUp LogoSri LankaSL195/5RunnerUp LogoPakistanPAK191/9Arjuna Ranatunga (Pakistan)Colombo
1984RunnerUp LogoIndiaIND97/0RunnerUp LogoSri LankaSL96/10Surinder Khanna (India)Sharjah

செய்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இதுவரை அதிக முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள அணி எது?

ODI, T20 போட்டி உள்பட 7 முறை இந்தியா ஆசிய கோப்பையில் சாம்பியன் ஆகியிருக்கிறது.

முதல் ஆசிய கோப்பை தொடரில் ஜெயித்த அணி எது?

இந்தியா.1984ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா முதல்முறையாக ஜெயித்தது.

அதிக முறை ஆசிய கோப்பையை ஜெயித்த இரண்டாவது அணி எது?

இலங்கை. 6 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. கடைசியாக நடந்த டி20 போட்டியில் இலங்கை சாம்பியன் ஆனது.