ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  கண்ணோட்டம்  /  ஆசிய கோப்பை நடைபெறும் இடங்கள்

ஆசிய கோப்பை போட்டி நடக்கும் இடங்கள்


ஆகஸ்ட் 30-ம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில்நேபாளத்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். செப்டம்பர் 6ஆம் தேதி பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டி உட்பட மற்றமூன்று போட்டிகள் லாகூரில் நடைபெறும். செப்டம்பர் 17-ம்தேதி இறுதிப் போட்டி உட்பட மற்ற அனைத்து போட்டிகளும்இலங்கையிலும், 3 போட்டிகள் கண்டியிலும், 6 போட்டிகள்கொழும்பிலும் நடைபெறவுள்ளன. செப்டம்பர் 2-ம் தேதிகண்டியில் இந்தியா- பாகிஸ்தான் ரவுண்ட் ராபின்போட்டியும், செப்டம்பர் 10-ம் தேதி கொழும்பில் சூப்பர் 4சுற்றில் மறு போட்டியும் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 6ம் தேதி சூப்பர் 4 சுற்றில் ஏ1 vs பி 2 ஆட்டம்லாகூரிலும், செப்டம்பர் 9ம் தேதி சூப்பர் 4 சுற்றில் பி 1 vs பி2 ஆட்டம் கொழும்பிலும் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 10சூப்பர் 4 சுற்றில் ஏ1 vs ஏ2 ஆட்டம் கொழும்பிலும்,செப்டம்பர் 12 சூப்பர் 4 சுற்றில் ஏ2 vs பி 1 ஆட்டம்கொழும்பிலும் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 14 அன்றுசூப்பர் 4 சுற்றில் ஏ1 vs பி 1 ஆட்டம் கொழும்பிலும்செப்டம்பர் 15 அன்று சூப்பர் 4 சுற்றில் A2 Vs B2 ஆட்டம்கொழும்பிலும் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 17 அன்றுஇறுதி ஆட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.குரூப் 1 இல் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியஅணிகளும் குரூப் 2 இல் இலங்கை, ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் ஆகிய அணிகளும் உள்ளன.இந்தப் போட்டியை ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டும்என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.நான்கு போட்டிகள் நாட்டை விட்டு மாற்றப்படுவதை இந்தவகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடுத்தது.இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்தவெற்றியா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில்கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில்பிசிசிஐ, பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணிவிளையாடாது என்று தெளிவுபடுத்தியதிலிருந்து,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமையில் மூன்றுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1984-ஆம் ஆண்டு முதல்இதுவரை நடைபெற்ற 15 தொடர்களில் இந்தியா மற்றும்பாகிஸ்தானில் தலா ஒரு முறை மட்டுமே போட்டிகள்நடைபெற்றுள்ளன. கடந்த 2008-ஆம் ஆண்டு ஆசிய கோப்பைதொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட்அணி அங்கு விளையாடிய கடைசி போட்டியும் இதுதான்.
The Gaddafi Cricket Stadium

The Gaddafi Cricket Stadium

Lahore, Pakistan
கடாஃபி கிரிக்கெட் ஸ்டேடியம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறுகிறது. இப்போட்டிகள் நடைபெறும் மைதானம் குறித்து அறிந்து கொள்வோம்.வரலாற்று நகரமான லாகூரில் கடாஃபி ஸ்டேடியம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான நய்யார் அலி தாதாவால் வடிவமைக்கப்பட்ட கடாஃபி ஸ்டேடியம் முகலாய கட்டிடக் கலையால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்டேடியத்திற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை வழங்கும் அழகான வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. லிபியாவின் கர்னல் கடாஃபியின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. கடாஃபி ஸ்டேடியத்தில் 1959ஆம் ஆண்டிலேயே முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. அப்போது சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடியது. இந்த ஸ்டேடியம் 1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்துவதற்காக மறுசீரமைக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆகும். புதிய ஸ்டேடியத்தில் முற்றிலும் பிளாஸ்டிக் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கான்கிரீட்டாக இருந்தது.இந்த ஸ்டேடியத்தில் 60,000-க்கும் மேற்பட்டோர் அமரலாம். 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கடாஃபி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த மைதானம் ஆரம்பத்தில் லாகூர் ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டது. ஆனால், பின்னர் 1974-இல் கடாஃபி என்று மறுபெயரிடப்பட்டது. இந்த ஸ்டேடியம் பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல ரன் வேட்டை அளிக்கும் மைதானமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டேடியத்தில் பல மற்கக முடியாத மைல்கல் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. 1976-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஜாவேத் மியான்தத்-ஆசிப் இக்பால் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இன்சமாமின் புகழ்பெற்ற முச்சதம் இதே ஸ்டேடியத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், சமீபகாலமாக இந்த ஸ்டேடியத்தில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கூட்டம் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
…read more

MATCHES WON

Batting First34 Won
Bowling First31 Won
50.75%49.25%
Avg 1st Innings253
Avg 2nd Innings218
PACE
69.89%

Percentage of wickets
taken by pacers

SPIN
30.11%

Percentage of wickets
taken by spinners

Pace Friendly

Team-wise Asia Cup performance at Gaddafi Stadium, Lahore

TeamsMatchesWonLostTieWin %
553419062
14104071
725029
642067
10100
The Multan Cricket Stadium

The Multan Cricket Stadium

Multan, Pakistan
முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியம்முல்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒன்றாகும். இது பாகிஸ்தானின் மற்றொரு பன்முக பயன்பாட்டு ஸ்டேடியம் ஆகும். இது கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 30,000 ரசிகர்கள் அமர முடியும். இது வீரர்களுக்கு நல்ல வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் அவுட்பீல்ட் பசுமையாக இருப்பதால் மைதானம் மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கிறது. முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியம் பசுமையான அவுட்பீல்டைக் கொண்டுள்ளது, மேலும் இது பாகிஸ்தானின் மிக அழகான ஸ்டேடியம் ஆகும். இந்த இடத்தில் சமீபத்தில் ஃபிளட் லைட்டுகள் பொருத்தப்பட்டன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சொந்தமான இந்த ஸ்டேடியம் 2001-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்த ஸ்டேடியம் முல்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ள பழைய காசிம் பாக் ஸ்டேடியத்திற்கு மாற்றாக உள்ளது. 2001 ஆம் ஆண்டில் முதல் டெஸ்ட் போட்டி இந்த ஸ்டேடியத்தில் நடந்தது. அதன் பிறகு இந்த ஸ்டேடியம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஸ்டேடியம் மிகவும் பிரபலமான ஒருநாள் கிரிக்கெட் ஸ்டேடியமும் ஆகும். 2003 முதல் ஒருநாள் போட்டிகள் இந்த ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் எளிதாக வென்றது.
…read more

MATCHES WON

Batting First6 Won
Bowling First5 Won
54.55%45.45%
Avg 1st Innings263
Avg 2nd Innings197
PACE
63.16%

Percentage of wickets
taken by pacers

SPIN
36.84%

Percentage of wickets
taken by spinners

Pace Friendly

Team-wise Asia Cup performance at Multan Cricket Stadium, Multan

TeamsMatchesWonLostTieWin %
1183073
20200
1100100
10100
R Premadasa Stadium

R Premadasa Stadium

Colombo, SriLanka
ஆர். பிரேமதசா ஸ்டேடியம்இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பெயரில் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியம் சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டது. இன்றுவரை இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இது, முன்னர் குறிப்பிடப்பட்டபடி, உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய மூன்று இலங்கை மைதானங்களில் ஒன்றாகும். டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 952 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது இந்த ஸ்டேடியத்தில் தான். டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக இன்று வரை திகழ்வது இதுவே. பிரேமதாசா ஸ்டேடியம் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளை நடத்தவில்லை. ஆனால் இன்னும் இலங்கையில் சிறந்த ஸ்டேடியங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
…read more

MATCHES WON

Batting First82 Won
Bowling First59 Won
54.3%45.70%
Avg 1st Innings236
Avg 2nd Innings194
PACE
53.63%

Percentage of wickets
taken by pacers

SPIN
46.37%

Percentage of wickets
taken by spinners

Pace Friendly

Team-wise Asia Cup performance at R.Premadasa Stadium, Colombo

TeamsMatchesWonLostTieWin %
1308041062
532622049
261410054
1311208
10100
Pallekele International Stadium

Pallekele International Stadium

Kandy, SriLanka
பல்லேகெலே இன்டர்நேஷனல் ஸ்டேடியம்இலங்கையில் உள்ள கண்டி பல்லேகெலே இன்டர்நேஷனல் ஸ்டேடியம் 35,000 பேர் அமரக்கூடிய வகையில் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இலங்கையின் புதிய ஸ்டேடியங்களில் ஒன்றான இது, 1983 முதல் 2007 வரை டெஸ்ட் போட்டிகளை நடத்திய அஸ்கிரிய ஸ்டேடியத்திற்கு மாற்றாக கட்டப்பட்டது. பல்லேகெலே அதன் முதல் டெஸ்ட் போட்டியை 2010 ஆம் ஆண்டில் நடத்தியது. இது இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2011 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பையிலிருந்து ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டன. 2012 ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை நடத்திய ஸ்டேடியங்களில் இதுவும் ஒன்றாகும். இதே மைதானத்தில்தான் இலங்கையின் சுரங்கா லக்மல் கபில் தேவ், இம்ரான் கான் போன்றவர்களைப் போல் புதிய ஸ்டேடியத்தில் முதல் பந்திலேயே டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் ஆனார்.
…read more

MATCHES WON

Batting First16 Won
Bowling First21 Won
41.03%58.97%
Avg 1st Innings257
Avg 2nd Innings205
PACE
60.08%

Percentage of wickets
taken by pacers

SPIN
39.92%

Percentage of wickets
taken by spinners

Pace Friendly

Team-wise Asia Cup performance at Pallekele International Cricket Stadium, Kandy

TeamsMatchesWonLostTieWin %
351915054
623033
614017
540080
211050
10100

செய்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஆசிய கோப்பையின் முதல் போட்டி எங்கு நடக்கிறது?

ஆசிய கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தானின்முல்தானில் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தொடங்குகிறது.பிற்பகல் 3.30 மணிக்கு பாகிஸ்தான், நேபாளம் ஆகியஅணிகளுக்கு இடையே இப்போட்டி நடக்கிறது.

ஆசிய கோப்பையின் பைனல் எங்கு நடக்கிறது?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் பைனல் இலங்கையின்கொழும்பில் நடக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி எப்போது, எங்குநடக்கிறது?

பாகிஸ்தான்-இந்தியா இடையே இலங்கையின் கண்டியில்செப்டம்பர் 2ம் தேதி போட்டி நடக்கிறது.