Women's Asia Cup: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகல்-காரணம் என்ன?
Women Asia Cup 2024: இந்தியாவின் ஷ்ரேயங்கா பாட்டீலுக்கு "இடது கையின் நான்காவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது" என்று ACC வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் ஆஃப் ஸ்பின்னர் ஷ்ரேயங்கா பாட்டீல் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கையின் தம்புல்லாவில் உள்ள ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை 2024 இன் 5 வது போட்டியில் இந்திய பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெண்கள் அணிகள் மோதுகின்றன.
எலும்பு முறிவு
இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஷ்ரேயங்காவுக்கு இடது கையின் நான்காவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
21 வயதான கிரிக்கெட் வீராங்கனைக்கு பதிலாக தனுஜா கன்வார் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்று வுமன் இன் ப்ளூ அழைப்பு விடுத்துள்ளது.
தம்புல்லாவில் நடந்த பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஷ்ரேயங்கா அற்புதமாக பந்து வீசினார். 3.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 14 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த பிறகு, சிட்ரா அமீன் (35 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள்), துபா ஹசன் (19 பந்துகளில் 22 ரன்கள், 3 பவுண்டரிகள்), பாத்திமா சனா (16 பந்துகளில் 22*, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் சீராக விழுந்து கொண்டே இருந்தன.
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டீல் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பூஜா வஸ்த்ராகரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரன் சேஸிங்கில் ஷபாலி வர்மா (29 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (31 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள்) ஆகியோர் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இடையில் சில விக்கெட்டுகளை இழந்த இந்தியா சரியான நேரத்தில் மீண்டு வந்து 7 விக்கெட்டுகள் மற்றும் 35 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை வென்றது.
தீப்தி மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக, தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு துணையாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் இணையவுள்ளனர்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தனது முதல் பயணத்தை தொடங்குகிறார். இந்த தொடரில் டி20, ஒரு நாள் தலா 3 போட்டிகளில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்து இரு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு நாள் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், டி20 அணிக்கு சூர்ய குமார் யாதவ் கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.
இதையடுத்து இலங்கை சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் இணை பயிற்சியாளர்களாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் அபிஷேக் நாயர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி நெதர்லாந்து வீரர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் இணையவுள்ளனராம்.
டாபிக்ஸ்