Ind women vs Pak women: மகளிர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை பந்தாடியிருக்கும் இந்தியா! இதுவரை பெற்ற வெற்றிகள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ind Women Vs Pak Women: மகளிர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை பந்தாடியிருக்கும் இந்தியா! இதுவரை பெற்ற வெற்றிகள் லிஸ்ட்

Ind women vs Pak women: மகளிர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை பந்தாடியிருக்கும் இந்தியா! இதுவரை பெற்ற வெற்றிகள் லிஸ்ட்

Jul 18, 2024 07:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 18, 2024 07:56 PM , IST

  • India vs Pakistan, Women's Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டி இந்திய மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதுவரை இந்த இரு அணிகளுக்கு இடையிலான மோதலும், வெற்றிகள் குறித்து பார்க்கலாம்.

மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. முதல் போட்டியே ஹை வோல்டேஜ் போட்டியாக இந்தியா மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது மோதலாக இது அமைகிறது. டி20 உலகக் கோப்பை தொடர், லெஜண்ட்ஸ் லீக் இறுதிப்போட்டியை தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை தொடரில் மகளிர் அணிகள் மோத இருக்கின்றன

(1 / 6)

இந்திய மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகள் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் போட்டியில் மோதியதில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இந்திய மகளிர் வெற்றி விகிதம் 100 சதவீதமாக உள்ளது

(2 / 6)

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய மகளிர் - பாகிஸ்தான் மகளிர் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய மகளிர் 11, பாகிஸ்தான் மகளிர் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதிலும் இந்திய மகளிர் அணி டாப்பில் உள்ளது

(3 / 6)

2012இல் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் முதல் முறையாக பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதன் பின்னர் 2016 டி20 உலகக் கோப்பை தொடரில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மகளிர், இந்திய மகளிர் அணியை இரண்டாவது முறையாக வீழ்த்தியது. கடைசியாக 2022இல் ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியை தோற்கடித்தது  

(4 / 6)

இந்திய மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகள் கடைசியாக 2023 டி20 உலகக் கோப்பை தொடரில் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் வெற்றி பெற்றது. கடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் தோல்வியடைந்தபோதிலும், சாம்பியன் ஆனது

(5 / 6)

ஆசிய கோப்பை தொடர்களில் இந்த இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மூன்று முறை இந்தியா மகளிர் வெற்றி பெற்றுள்ளது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்