தமிழ் செய்திகள்  /  Sports  /  March Sports Rewind 2024 From Cricket To Badminton And Ipl Important Events

March Sports Rewind: மந்தனா தலைமையிலான ஆர்சிபி சாம்பியன் ஆனது முதல் ஐபிஎல் திருவிழா தொடங்கியது வரை..!

Manigandan K T HT Tamil
Mar 31, 2024 05:50 AM IST

March Sports Rewind 2024: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டெல்லி அணி முதல் சீசனைப் போல் ரன்னர்-அப் ஆனது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. ஸ்மிருதி மந்தனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

ஸ்போர்ட்ஸ் ரீவைண்ட் மார்ச் 2024
ஸ்போர்ட்ஸ் ரீவைண்ட் மார்ச் 2024

ட்ரெண்டிங் செய்திகள்

மார்ச் 2: WPL-இல் ஆர்சிபி-மும்பை இந்தியன்ஸ் மோதிய ஆட்டத்தில் மும்பை ஜெயித்தது.

மார்ச் 3: WPL-இல் குஜராத்தை வீழ்த்தி டெல்லி ஜெயித்தது.

மார்ச் 4: WPL-இல் ஆர்சிபி, யு.பி வாரியர்ஸ் மோதிய ஆட்டத்தில் ஆர்சிபி ஜெயித்தது.

மார்ச் 5:  மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி வென்றது

மார்ச் 6: RCB அணியை வீழ்த்தியது குஜராத் ஜெயன்ட்ஸ்.

மார்ச் 7: UP வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு குடும்பத்தினர் முன்னிலையில் கவுரம் அளிக்கப்பட்டது.

மார்ச் 8: UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதிய 15வது போட்டியில் யு.பி அணி 1 ரன் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 9: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், 16வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஜெயித்தது.

இந்திய அணி இங்கிலாந்தை தர்மசாலாவில் நடந்த 5வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மார்ச் 10: டெல்லி-ஆர்சிபி மோதிய ஆட்டத்தில் டெல்லி 1 ரன் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 11: யு.பி.வாரியர்ஸ் அணியை குஜராத் வீழ்த்தியது.

மார்ச் 12: மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்தியது.

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மார்ச் 13: குஜராத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி கண்டது.

மார்ச் 15: எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸை ஊதித் தள்ளி பைனலுக்கு முன்னேறியது ஆர்சிபி.

மார்ச் 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டெல்லி அணி முதல் சீசனைப் போல் ரன்னர்-அப் ஆனது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகிழ்ச்சியுடன் காணப்பட்டது.

மார்ச் 18: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியனானார். மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியனானார்.

மார்ச் 19: மியாமி ஓபனில் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி கண்டார்.

மார்ச் 22: ஐபிஎல் திருவிழா கோலாகலமாக சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 23: ஐபிஎல் கிரிக்கெட்டின் 2வது மேட்ச்சில் டெல்லி-பஞ்சாப் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

நடந்த மற்றொரு மேட்ச்சில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

மார்ச் 24: ராஜஸ்தான் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 25: பஞ்சாப்-ஆர்சிபி மோதிய ஆட்டத்தில் ஆர்சிபி ஜெயித்தது. 

டி20யில் போட்டிகளில் 100 முறை 50 பிளஸ் ஸ்கோரை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார், இது அவரை டி 20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கக்கூடாது என்று நினைக்கும் விமர்சகர்களை அமைதியாக்க உதவும்.

மார்ச் 26: குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி நடையைத் தொடர்கிறது.

மார்ச் 27: மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஆட்டத்தில் ஐதராபாத் அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 28: ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 29: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. விராட் கோலியின் அதிரடி ஆட்டம் வீணானது.

WhatsApp channel