தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஆசிய கோப்பை  /  புள்ளிப் பட்டியல்

ஆசிய கோப்பை 2023 புள்ளிப் பட்டியல்


ஆசியக் கோப்பை 2023 போட்டி, 16-வது எடிஷன் ஆகும். இந்த முறை இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. 50 ஓவர் வடிவிலான இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஆட்டங்கள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. 2023 ஏ.சி.சி பிரீமியர் கோப்பையை வென்றதன் மூலம் தகுதி பெற்ற நேபாளமும் இந்த அணிகளுடன் கோதாவில் இந்த முறை குதிக்கிறது. இந்தப் போட்டி 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக, 2023 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேபாளம் சூப்பர்-4 ஐ எட்டுவது மிகவும் கடினம் என்றே கூறப்படுகிறது. அதனால்தான் பாகிஸ்தான் ஏ 1 மற்றும் இந்தியா ஏ 2 என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், வங்கதேசத்துக்கு பி 1 மற்றும் இலங்கைக்கு பி 2 அந்தஸ்து கிடைத்துள்ளது. சூப்பர் -4 சுற்றில் ஏ 1 மற்றும் பி 2 அணிகள் மோதும் ஒரே போட்டி லாகூரில் நடைபெறும். சூப்பர்-4 சுற்றின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப பிசிசிஐ ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்துவந்தது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் உறவுகள் காரணமாக கிரிக்கெட் உறவில் விரிசல் விழுந்துள்ளது. எனினும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதி வருகின்றன. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி வர மறுத்தால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாட இந்தியாவுக்கு நாங்கள் வர மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முரண்டு பிடித்தது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியா, ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை நடத்தவுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது முடிவை பின்வாங்கவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு, ஒரு வழியாக 'பொது இடத்தில் போட்டி நடத்த நாங்கள் ரெடி' என பாகிஸ்தான் பச்சை கொடி காட்டியது. தொடக்க ஆட்டம் பாகிஸ்தானின் முல்தான் நகரிலும், இறுதி ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரிலும் நடைபெறவுள்ளது. அதாவது 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறுகின்றன.

Asia Cup Points Table 2024 - Super 4

PosTeams
1
Indiaindindia
2
Indiaslsri lanka
3
Indiabanbangladesh
4
Indiapakpakistan
MatchesWonLostTiedNRPointsNRRSeries Form
321004+1.753
LWW
321004-0.134
WLW
312002-0.463
WLL
312002-1.283
LLW

Pos: Position, Pld: Played, Pts: Points, NRR: Net Run Rate

Asia Cup Points Table 2024 - Group A

PosTeams
1
Indiapakpakistan
2
Indiaindindia
3
Indianepnepal
MatchesWonLostTiedNRPointsNRRSeries Form
210013+4.760
AW
210013+1.028
WA
202000-3.572
LL

Pos: Position, Pld: Played, Pts: Points, NRR: Net Run Rate

Asia Cup Points Table 2024 - Group B

PosTeams
1
Indiaslsri lanka
2
Indiabanbangladesh
3
Indiaafgafghanistan
MatchesWonLostTiedNRPointsNRRSeries Form
220004+0.594
WW
211002+0.373
WL
202000-0.910
LL

Pos: Position, Pld: Played, Pts: Points, NRR: Net Run Rate

Asia Cup Points Table 2022-SUPER FOUR

PosTeamMatWonLostTiedN/RPtsNRR
1
SLSRI LANKASL
3300060.701
2
PAKPAKISTANPAK
321004-0.279
3
INDINDIAIND
3120021.607
4
AFGAFGHANISTANAFG
303000-2.006
Pos: Position, Pld: Played, Pts: Points, N/R: No Result, NRR: Net Run Rate

Asia Cup Points Table 2022-GROUP A

PosTeamMatWonLostTiedN/RPtsNRR
1
INDINDIAIND
2200041.096
2
PAKPAKISTANPAK
2110023.811
3
HKHONG KONGHK
202000-4.875
Pos: Position, Pld: Played, Pts: Points, N/R: No Result, NRR: Net Run Rate

Asia Cup Points Table 2022-GROUP B

PosTeamMatWonLostTiedN/RPtsNRR
1
AFGAFGHANISTANAFG
2200042.467
2
SLSRI LANKASL
211002-2.233
3
BANBANGLADESHBAN
202000-0.576
Pos: Position, Pld: Played, Pts: Points, N/R: No Result, NRR: Net Run Rate

செய்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஆசிய கோப்பை 2023 புள்ளி அட்டவணை எவ்வாறு செயல்படுகிறது?

6 அணிகளில் எந்த நான்கு அணிகள் சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதை ஆசியக் கோப்பை புள்ளி பட்டியல் தீர்மானிக்கும். ஒவ்வொரு வெற்றிக்கும், ஒரு அணிக்கு 2 புள்ளிகளும், சமநிலையில் இருந்தால் தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும்.

ஆசிய கோப்பையில் குரூப் ஏ மற்றும் குரூப் பி என அணிகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நடப்பு சாம்பியனான இலங்கை ஆகியவை 'பி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

2023 ஆசிய கோப்பையை இந்தியா ஜெயிக்குமா?

ஏற்கனவே 7 முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, அடுத்த மாதம் 8வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வலிமை கொண்டுள்ளது.

ஆசிய கோப்பை 2023 போட்டியை நடத்தும் நாடு எது?

2023 ஆசிய கோப்பை தொடரை இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து நடத்தவுள்ளன. ஆரம்பத்தில் பாகிஸ்தான் போட்டியை முழுமையாக நடத்த திட்டமிட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டிற்கு இந்திய அணி பயணம் செய்ய வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருந்ததால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) ஒரு ஹைப்ரிட் மாடலை கொண்டு வந்தது.

2023 ஆசிய கோப்பையின் ஏ பிரிவில் உள்ள அணிகள் எவை?

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

2023 ஆசிய கோப்பையில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் நடப்பு சாம்பியனான இலங்கை ஆகியவை ஆசிய கோப்பை 2023-இல் விளையாடுகின்றன.

2023 ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்?

கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான், இந்த முறையும் அதை செய்ய வாய்ப்புள்ளது.

2022 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் இழந்தது ஏன்?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2023 ஆசிய கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்லுமா?

இல்லை, இந்தியா தனது அனைத்து ஆசிய கோப்பை 2023 போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.

2023 ஆசிய கோப்பையை வெல்லுமா வங்கதேசம்?

2012 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வங்கதேசம் பின்தங்கிய நிலையில் உள்ளது.

ஆசிய கோப்பையில் இந்தியா எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது?

ஆசிய கோப்பையை 7 முறை வென்றுள்ள இந்திய அணி, 2016, 2018-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆசிய கோப்பையில் ஷிகர் தவான் ஏன் விளையாடவில்லை?

ஜனவரி மாதம் இந்தியாவின் ஒரு நாள் அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவானின் மறுபிரவேசத்திற்கான கதவுகள் மூடப்பட்டதாகத் தெரிகிறது.

ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்துமா வங்கதேசம்?

2012 ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் மீண்டும் சாதிக்க வாய்ப்புள்ளது.

2023 ஆசிய கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகள் எவை?

2023 ஆசியக் கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள்தான் ஃபேவரைட்டாக கருதப்படுகிறது.

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி என்ன?

ஆசிய கோப்பை 2023-க்கான இந்திய அணி இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் பிற நட்சத்திரங்கள் நிறைந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை போட்டிகள் எப்போது 20 ஓவர்களாக குறைக்கப்பட்டன?

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் ஆசிய கோப்பை 20 ஓவர்களில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டில் போட்டி ஒருநாள் போட்டிகளுக்குத் திரும்பியபோது, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் மீண்டும் டி20 முறையில் ஆசிய கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 50 ஓவர் முறையில் நடைபெறுகிறது.