ஆசிய கோப்பை 2023-இல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்ஸ்

ஆசிய கோப்பை 2022-இல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்ஸ்


கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்புடன் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். அதிலும், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இலங்கையின் லசித் மலிங்கா. அதிக விக்கெட்டுகளைப் பொறுத்தவரை, ஆசியக் கோப்பையில் இலங்கை பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இலங்கை பந்துவீச்சாளர்கள் டாப்-3 இடத்தில் உள்ளனர். ஆசிய கோப்பை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா மொத்தம் 33 விக்கெட்டுகளையும், முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அஜந்தா மெண்டிஸ் 26 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் இந்தியாவிலிருந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா மொத்தம் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம், டி20 வடிவத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், புவனேஸ்வர் குமாரின் பெயர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார், மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், லசித் மலிங்கா 29 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அஜந்தா மெண்டிஸ் 26 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 25 விக்கெட்டுகளையும், இலங்கையின் சமிந்தா வாஸ் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இலங்கை முன்னாள் பவுலர் லசித் மலிங்கா. முதல் 3 இடங்களில் இலங்கை பவுலர்கள் தான் இருக்கின்றனர். ஆசியக் கோப்பை 2023 போட்டி 16-வது எடிஷன் ஆகும். இந்த முறை இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து நடத்துகின்றன. 50 ஓவர் வடிவிலான இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
PlayerTeamsWktsAvgOvrRunsBBFECSR3w5wMdns
1
Matheesha PathiranaMatheesha Pathirana
SL1124402704/32622301
2
Dunith WellalageDunith Wellalage
SL1017421795/40425012
3
Mohammed SirajMohammed Siraj
IND1012261226/21415114
4
Shaheen AfridiShaheen Afridi
PAK1023412354/35524103
5
Kuldeep YadavKuldeep Yadav
IND911281035/25319112
6
Haris RaufHaris Rauf
PAK913251204/19416201
7
Taskin AhmedTaskin Ahmed
BAN919331724/44522202
8
Maheesh TheekshanaMaheesh Theekshana
SL829452333/69533101
9
Shoriful IslamShoriful Islam
BAN718291313/36424102
10
Naseem ShahNaseem Shah
PAK720281403/34424201
11
Hardik PandyaHardik Pandya
IND61120683/3320103
12
Ravindra JadejaRavindra Jadeja
IND625351523/40435101
13
Shadab KhanShadab Khan
PAK640412454/27541101
14
Shardul ThakurShardul Thakur
IND521181073/65521100
15
Gulbadin NaibGulbadin Naib
AFG523181184/60621100

செய்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஆசியக் கோப்பையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் யார்?

ஆசிய கோப்பையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் லசித் மலிங்கா. 33 விக்கெட்டுகளுடன் லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். இவர், இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

ஆடவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?

ஆசிய கோப்பை தொடரில் லசித் மலிங்கா ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லசித் மலிங்கா மூன்று முறை இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆடவர் ஆசிய கோப்பையில் இந்தியாவிலிருந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?

ஆசியக் கோப்பையில் இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவீந்திர ஜடேஜா 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.