ஆசிய கோப்பை 2022-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்


ஆசிய கோப்பை கிரிக்கெட் ஒருநாள் அதாவது 50 ஓவர் வடிவத்திலும், 20 ஓவர் வடிவத்திலும் நடத்தப்படுகிறது. இந்த முறை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு இது முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கு இதுவொரு சிறந்த பயிற்சி களமாகவும், தங்களது திறமையை சுய பரிசோதனை செய்து கொள்ளும் தொடராகவும் இருக்கும். ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் இதுவரை இரண்டு முறை நடந்துள்ளது. 2016-ல் ஒரு முறையும், 2022-ல் ஒரு முறையும் நடந்துள்ளது. டி20 வடிவ ஆசிய கோப்பையை பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டியை எடுத்துக் கொண்டால், இலங்கையின் சனத் ஜெயசூர்யா அதிக ரன்கள் எடுத்துள்ளார். இலங்கையின் குமார் சங்ககாரா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சோயப் மாலிக் நான்காவது இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா ஆகியோருக்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆசிய கோப்பையில் ஒருநாள், டி20 சேர்த்து 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 1000 ரன்களை கடந்துள்ளனர். ஜெயசூர்யா, சங்ககாரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மட்டுமே 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஜெயசூர்யா அதிக சதங்கள் பதிவு செய்துள்ளார். விராட் கோலி மற்றும் சங்ககாரா ஆகியோர் தலா நான்கு சதங்கள் விளாசியிருக்கின்றனர். முதல் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தை பிடித்தது. பாகிஸ்தான் தனது இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் நாடு திரும்பியது. அதைத் தொடர்ந்து, 1986-இல் நடந்த ஆட்டத்தில் இலங்கை சாம்பியன் ஆனது. பின்னர், 1988, 1990, 1995 என தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றது. 1997-இல் இலங்கையும், 2000-இல் பாகிஸ்தானும் சாம்பியன் ஆனது. 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்ச்சியாக சாம்பியன் ஆனது. பின்னர் 2010- இல் இந்தியாவும், 2012-இல் பாகிஸ்தானும் சாம்பியன் ஆனது. 2014-இல் இலங்கையும், 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவும் ஜெயித்தது. 2016-இல் டி20 வடிவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022-இல் டி20 வடிவில் நடத்தப்பட்ட போட்டியில் இலங்கை சாம்பியன் ஆனது. அந்த வகையில், நடப்பு சாம்பியனாக இலங்கை உள்ளது. ஒரு நாள் ஆசிய கோப்பை என்றால் இந்தியா கடைசியாக சாம்பியன் ஆகியிருக்கிறது. அதிகபட்சமாக இதுவரை இந்தியா 7 தடவையும், இலங்கை 6 முறையும் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைகளில் ஏந்தியிருக்கிறது. இது டி20, ஒரு நாள் இரண்டு வடிவங்களையும் சேர்த்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மொத்தம் 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. அந்த அணி கடைசியாக 2012-இல் தான் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை.
PlayerTeamsRunsSRMatInnNOHSAvg30s50s100s6s
1
Shubman GillShubman Gill
IND30293662121750216
2
Kusal MendisKusal Mendis
SL2708566092450305
3
Sadeera SamarawickramaSadeera Samarawickrama
SL2158966093351202
4
Babar AzamBabar Azam
PAK20797540151510014
5
Mohammad RizwanMohammad Rizwan
PAK1959454286*971203
6
Rohit SharmaRohit Sharma
IND19410765174*4803011
7
Najmul Hossain ShantoNajmul Hossain Shanto
BAN19385220104960112
8
Iftikhar AhmedIftikhar Ahmed
PAK179122531109*891016
9
Charith AsalankaCharith Asalanka
SL1797466262*442103
10
Shakib Al HasanShakib Al Hasan
BAN1739755180431204
11
KL RahulKL Rahul
IND16989431111*841012
12
Mehidy HasanMehidy Hasan
BAN15884551112390013
13
Towhid HridoyTowhid Hridoy
BAN1586855082310203
14
Ishan KishanIshan Kishan
IND1438164182471103
15
Pathum NissankaPathum Nissanka
SL1327866041222000

செய்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

விராட் கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் என்ன?

2012 ஆசியக் கோப்பையின் போது டாக்காவில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் எடுத்ததே விராட் கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும். இந்தியா 13 பந்துகள் மீதமிருக்கையில் 330 ரன்கள் எடுத்தார்.

ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மாவின் சாதனை என்ன?

ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா 22 ஒருநாள் போட்டிகளில் 745 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 23 போட்டிகளில் 971 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இந்தியர் ஆவார்.

ஆசிய கோப்பை 2023 எங்கு நடைபெறும்?

ஆசியக் கோப்பை 2023 முதலில் முற்றிலும் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஹைபிரிட் மாடல் முன்மொழியப்பட்ட பின்னர், இப்போட்டி இப்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும்.

2023 ஆசிய கோப்பையில் எந்தெந்த அணிகள் பங்கேற்கும்?

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் ஆசிய கோப்பையில் மோதுகின்றன.

ஆசிய கோப்பையின் முக்கியத்துவம் என்ன?

ஆசியக் கோப்பை என்பது கண்டத்தின் நாடுகளுக்கான கிரிக்கெட் அட்டவணையின் இன்றியமையாத பகுதியாகும். அணிகள் பெரிய போட்டிகளுக்குத் தயாராவதற்கான பிளாட்ஃபார்மாக இதை பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் உலக அரங்கில் தங்கள் முத்திரையை பதிக்க மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கடந்த 1984-ம் ஆண்டு முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானிடம் தோற்றாலும் ஆசிய கோப்பையை இந்தியா வெல்லுமா?

ஆமாம், அது நடக்கலாம். இதற்கு முன்பும் லீக் சுற்றில் அல்லது சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

ஆசிய கோப்பை தொடரை தவறவிட்டாரா விராட் கோலி?

ஆம், 2018 ஆசியக் கோப்பை தொடரின் அப்போதைய இந்திய கேப்டனுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்ததால் விராட் கோலி விலகினார். கோலி இல்லாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பரபரப்பான இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

வரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துமா?

ஆம், பாகிஸ்தான் இதற்கு முன்பு - மிக சமீபத்தில் - கடந்த ஆண்டு - இந்தியாவை தோற்கடித்துள்ளது, அவர்களை மீண்டும் தோற்கடிக்க முடியும்.

அடுத்த ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் தகுதி வங்கதேசத்துக்கு இருக்கிறதா?

ஆசிய கோப்பையில் வங்கதேசம் நிச்சயம் இந்தியாவை வீழ்த்தும். கடந்த 2012-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் 100-வது சதத்தை கெடுத்துவிட்டது.

ஆசிய கோப்பை 2022 இன் சிறந்த தருணங்கள் யாவை?

விராட் கோலி தனது முதல் டி20 சதம், ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி ரன்கள் அடித்தது மற்றும் இலங்கை கோப்பையை வென்றது ஆகியவை ஆசிய கோப்பை 2022 இன் சிறந்த தருணங்களாகும்.

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் என்ன?

கடந்த 2012-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி எடுத்த 183 ரன்கள் தான் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்.

ஆசிய கோப்பையில் ஷிகர் தவான் விளையாடுவாரா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஒருநாள் அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார், அவர் மீண்டும் ஆசியக் கோப்பைக்கு அழைக்கப்பட்டால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

2023 ஆசிய கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகள் எவை?

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 அணிகளும் ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.