தயிர் வடை சாப்பிட்டு இருப்பீர்கள்; தயிர் இட்லி சாப்பிட்டு இருக்கிறீர்களா? இதோ ருசித்துப் பாருங்கள்!
Dec 05, 2024, 03:12 PM IST
தயிர் இட்லி செய்வது எப்படி என்று பாருங்கள்.
இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.
கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.
தேவையான பொருட்கள்
இட்லி – 15
தேங்காய் – 2 கப்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – ஒரு ஸ்பூன்
தயிர் – 2 டம்ளர்
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் இட்லியை தயாரித்து, அதை ஆறவைத்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பெரிய பவுலில் கெட்டி தயிரை எடுத்து, அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவேண்டும். பீட்டர் அல்லது கையால் பீட் செய்துகொள்ளவேண்டும்.
பின்னர் துண்டுகளாக நறுக்கிய இட்லி துண்டுகளை தயார் செய்து வைத்துள்ள கலவையில் போட்டு ஊற விட்டு, அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விடவேண்டும். தயிர் வடைக்கு தூவுவதுபோல் கொஞ்சமாக காரபூந்தி தூவிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் மினி இட்லிகளையும் தயாரித்துக்கொள்ளலாம். இன்னும் சுவையை அதிகரித்து தரும். சூப்பர் சுவையான தயிர் இட்லிகள் தயார்.
இதை காலை உணவாக சாப்பிடும்போது உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் நல்லது. ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்