டாப் 5 பெனிஃபிட்ஸ் ஆப் பனானா லீஃப் : சாப்பிடவும், உணவாகவும் வாழையிலையை பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்?
டாப் 5 பெனிஃபிட்ஸ் ஆப் பனானா லீஃப் என்னவென்று பாருங்கள். சாப்பிடவும், உணவாகவும் வாழையிலையை பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென தெரிந்துகொள்ளுங்கள்.
வாழையிலை என்பது இயற்கையின் ஆச்சர்யங்களுள் ஒன்றுதான். வாழையிலை இந்திய கலாச்சாரத்துடன் தொடர்புகொண்ட ஒன்றாகம். தென்னிந்திய உணவுகளில் வாழையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு உட்கொள்வதற்கு வாழையிலைதான் பயன்படுத்தப்படுகிறது. கடவுளுக்கு உணவு படைக்கவும், மற்ற உபயோகங்களுக்காகவும் என வாழையிலை பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன், அதில் சில ரெசிபிக்களும் தயாரிக்கப்படுகிறது. வாழையிலையில் உணவு உண்பதாலும், அதை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவதாலும் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இயற்கையின் அரிய பொக்கிஷங்களுள் ஒன்றாகத்தான் வாழையிலை பார்க்கப்படுகிறது. நீண்ட, மிருதுவான, பசுமையான வாடிழயிலை, இந்தியாவின் பல இடங்களில் பிரசித்தி பெற்றது. இதை உணவு சாப்பிடவும், உணவை மடித்து பொட்டலம் கட்டவும் பயன்படுத்துகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளும் வாழையிலையை சாப்பிடுவதற்காக பயன்படுத்துகிறார்கள். இதைத்தவிர வாழையிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதுதான் வாழையிலையை இயற்கையின் பொக்கிஷமாக மாற்றியுள்ளது. அந்த வாழையிலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
காயங்களுக்கு மருந்து
வெட்டுக்காயங்கள், நெருப்பு காயங்கள் என அனைத்துக்கும் வாழையிலை மருந்தாகிறது. நெருப்பு காயங்களுக்கு குளுமையைத் தருகிறது. அதனால்தான் நெருப்பு காயங்களால் பாதிக்கப்பட்டவர்களை வாழையிலையால் போர்த்தி மூடுகிறார்கள். பாரம்பரியமாக கொப்புளங்களுக்கு, வாழையிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மூடியிட்டு வந்தார்கள். இது காயங்களை ஆற்றும் தன்மையைக் கொண்டுள்ளது.
விக்கல்
விக்கல் என்பது அவ்வப்போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் சிலருக்கு தொடர் விக்கல் ஏற்பட்டு தொந்தரவாக மாறும். அவர்களுக்கு சில வழிகளில் விக்கலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், எரிந்த வாழைப்பழத்தின் இலையை தேனில் கலந்து சாப்பிடும்போது கூடுதல் பலன் கிடைக்கிறது. இது விக்கலை உடனே நிறுத்தும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையென்றாலும், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சரும பொலிவு
வெயிலில் அதிகம் இருப்பது சருமத்தில் எண்ணற்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இது உங்கள் சருமத்தின் நிறத்தையே மாற்றும் தன்மைகொண்டது, சருமத்தை சிவக்கச் செய்யும். வாழையிலையில் அதிகளவில் லிக்னின்கள் உள்ளன. அவை புதிய செல்கள் உருவாவதை ஊக்குவித்து, செல்கள் அழிவதை தடுக்கிறது. இதனால் அது சன்ஸ்கிரீனாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாழையிலையும் வயிறு கோளாறுகளும்
நமக்கு ஏற்படும் சில வயிறு கோளாறுகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். வாழையிலை செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்பவையாகும். இது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. வாழையிலையை எரித்து அதன் சாம்பலை தண்ணீரில் கலந்து பருகும்போது அது அசிடிட்டி, செரிமானமின்மை உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்கிறது. எனவே மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை முயற்சிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வாழையிலை மருத்துவம்
நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் வாழையிலையில் அதிகம் உள்ளது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மைகொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் செய்யும். இதுகுறித்த ஆய்வு விலங்குகளில் செய்யப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்