தக்காளியையும், மல்லித்தழையையும் மட்டும் வைத்து ஒரு சட்னி அரைச்சுப் பாருங்களேன்! தினமும் கேட்பீர்கள்!
Nov 29, 2024, 04:03 PM IST
தக்காளியையும், மல்லித்தழையையும் வைத்து சட்னி அரைத்துப்பாருங்களேன்.
தக்காளியில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். தக்காளியில் உங்கள் உடலுக்கு தேவையான அளவு பீட்டா கரோட்டின்கள், லைக்கோபென்கள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் செல்களின் சேதத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தக்காளியில் கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.
கொத்தமல்லித்தழையின் நன்மைகள்
நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. கண்களுக்கு நன்மை தருகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. கொத்தமல்லித்தைழையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இவையிரண்டையும் சேர்த்து சட்னி தயாரிக்கும்போது அது உங்கள் உடலுக்கு கூடுதல் நன்மைகளைத் தரும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – கால் இன்ச்
பச்சை மிளகாய் – 1
பழுத்த தக்காளி – 2
புளி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – 2 கைப்பிடியளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி, சிறிய துண்டு புளி, மல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தக்காளி நன்றாக குழைந்து வந்தவுடன், அதை எடுத்து ஆறவைத்துவிடவேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன கடுகு சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து அதில் சட்னியை சேர்க்கவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறினால் வழக்கமாக 2 இட்லி சாப்பிடுபவர்கள் 4 இட்லிகள் கூடுதலாக சாப்பிடுவார்கள். 2 தோசை சாப்பிடுபவர்கள் 2 தோசை கூடுதலாக சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்