வித்யாசமான மஸ்ரும் ஃப்ரைட் ரைஸ்! காளான் பிரியர்கள் விடவே மாட்டார்கள்! நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட!
Nov 29, 2024, 02:26 PM IST
காளான் ஃப்ரைட் ரைஸ் செய்ய கற்றுக்கொள்ளலாமா?
காளானில், பல வகை உள்ளது. இதில் செலினியம், காப்பர், தியாமின், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளது. ஒரு கப் காளானில் 15 கலோரிகள் உள்ளது. 2.2 கிராம் புரதம் உள்ளது. கொழுப்பு 0.1 கிராம், கார்போஹைட்ரேட்கள் 3.7 கிராம், நார்ச்சத்துக்கள் 0.5 கிராம், சர்க்கரை 1.5 கிராம் உள்ளது. காளானில் உள்ள நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். காளான்கள் உங்கள் உணவுக்கு கார சுவையைக் கொண்டுவருகின்றன. இதை சாப்பிடும்போது உங்கள் உடலில் அதிகம் கொழுப்பு மற்றும் சோடியம் சேராது என்பது இதன் கூடுதல் பலன். இதில் உள்ள நன்மைகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டிய நன்மைகள் காளானில் உள்ளதாகவே கூறப்படுகிறது. அதுகுறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாள்பட்ட நோய்களை அகற்றி உங்களின் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்குகிறது. காளானில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. சோடியம் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. கொழுப்பை குறைக்க உதவுகிறது. மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டியை வழங்குகிறது. குடல் ஆரோக்கியத்தை தூண்டுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள்
சின்னவெங்காயம் – ஒரு கைப்பிடியளவு
பூண்டு – 5 பல்
வர மிளகாய் – 4
தக்காளி – மீடியம் சைஸ்
(இவையனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நல்ல மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம் – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
ஸ்டார் சோம்பு – 1
பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
சோம்பு – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – பூண்டு விழுது – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மல்லித்தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காளான் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
உதிரியாக வடித்த பாஸ்மதி அரிசி சாதம் – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு என அனைத்தையும் சேர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் அதில் இஞ்சி – பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதை பச்சை வாசம் போகும் வரை வதக்கியவுடன், அதில் அரைத்த விழுதை சேர்த்து அதையும் நன்றாக வதக்கவேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்