தலையில் சீப்பு வைத்தாலே முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறதா? அதிகம் அறியப்படாத இந்த எண்ணெய்தான் தீர்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தலையில் சீப்பு வைத்தாலே முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறதா? அதிகம் அறியப்படாத இந்த எண்ணெய்தான் தீர்வு!

தலையில் சீப்பு வைத்தாலே முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறதா? அதிகம் அறியப்படாத இந்த எண்ணெய்தான் தீர்வு!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2024 06:00 AM IST

தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் எண்ணெய் பாருங்கள்.

தலையில் சீப்பு வைத்தாலே முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறதா? அதிகம் அறியப்படாத இந்த எண்ணெய்தான் தீர்வு!
தலையில் சீப்பு வைத்தாலே முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறதா? அதிகம் அறியப்படாத இந்த எண்ணெய்தான் தீர்வு!

தலைமுடியின் வேர்க்கால்களில் மசாஜ்

எசன்சியல் எண்ணெயான ஜெரனியம் எண்ணெயை கேரியர் எண்ணெயான தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோ எண்ணெயுடன் கலந்துகொள்ளவேண்டும். இதை தலையில் தடவி நன்றாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது உங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஹேர் மாஸ்க் (நீங்களே தயாரிக்கும் முறை)

ஜெரனியம் எண்ணெயுடன் உங்களுக்கு உகந்த அல்லது பிடித்தமான ஹேர் மாஸ்க்கை கலக்கவேணண்டும். இதை நன்றாக அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். அடுத்து உங்கள் தலையில் வைத்து, அரை மணி நேரத்த்துக்குப்பின்னர் தலையை அலசவேண்டும். இதனால் உங்கள் தலைமுடிக்கு ஆழ்ந்த ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

ஷாம்பூ

ஜெரனியம் எண்ணெயில் சில துளிகள் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை கலந்து வைத்துவிடுங்கள். இது அரைமணி நேரம் ஊறட்டும். பின்னர் உங்கள் தலையில் தேய்த்து அலசுங்கள். இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்ய உதவும். இதனால் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியம்பெறும்.

வறண்ட வேர்க்கால்களுக்கு நீர்ச்சத்து கொடுப்பது

ஜெரனியம் எண்ணெயில் கேரியர் எண்ணெயை கலந்து வறண்ட மற்றும் அரிப்பு, எரிச்சல் உள்ள வேர்க்கால்களில் தடவுங்கள். இது அந்த இடத்துக்கு தேவையான நீர்ச்சத்ததை வழங்கி, அங்கு சீபம் உற்பத்தியை முறைப்படுத்துகிறது.

தலைமுடி உதிர்வை தடுப்பது

ஜெரனியம் எண்ணெய் பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாகக்கொண்டால், அது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும். இது உங்கள் தலைமுடி உதிர்வைத்தடுக்கும். உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும். உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

பொடுகைக் குறைக்கும்

ஜெரனியம் எண்ணெயை வைத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை மசாஜ் செய்யவேண்டும். இது பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள், உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடியின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.

பளபளப்பு கூட்டும்

ஜெரனியம் எண்ணெயை உங்கள் தலையில் நீங்கள் தடவும்போது, அது உங்கள் தலைமுடிக்கு பளபளப்பைத்தரும். தலைமுடியின் அடியில் முடி வெடிப்பதைத் தடுக்கும். உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் தலைமுடி பளபளப்பாக இருக்க உதவும்.

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும்

ஜெரனியம் எண்ணெய் தலைமுடியை வலுப்படுத்துகிறது. மேலும் அது தலைமுடியை அடர்த்தியாக்குகிறது. உதிர்ந்த தலைமுடி மீண்டும் வளர உதவுகிறது. எனவே நல்ல ரிசல்ட் கிடைக்கவேண்டுமெனில் தலைமுடிக்கு இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்.

பிசுபிசுப்பான தலை

உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் பிசுபிசுப்பானதாக இருந்தால், அது உங்கள் தலையில் அதை சமப்படுத்துகிறது. எண்ணெய் அதிகம் சேர்வதை தடுக்கிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.