சூடான சாதம் முதல் இட்லி வரை! எதுவாக இருந்தாலும் இந்த ஒரு பொடி மட்டும் போதும்! கம கமக்கும் கறிவேப்பிலை பொடி!
கறிவேப்பிலை வைத்து சுவையான கமகமக்கும் பொடி செய்ய முடியும். இந்த பொடியை வைத்து சூடான சாதம் முதல் சூடான இட்லி வரை எளிமையாக சாப்பிட்டு விடலாம். இந்த கறிவேப்பிலை இட்லி பொடியை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தலை முடி முதல் வயிற்று தொந்தரவு வரை பல உடல் நல பிரச்சனைகளை குணமாக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதுதான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை நாம் அனைத்து உணவுகள் செய்யும் போதும் பயன்படுத்துவோம். சில சமயங்களில் இந்த கறிவேப்பிலையை சாப்பிட முடிவதில்லை. ஆனால் இந்த கறிவேப்பிலை இல்லாமல் எந்த சமையலும் இருந்ததில்லை. இந்த கருவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் பல உறுப்புகள் சீராக இயங்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த கறிவேப்பிலையை நாம் சாப்பிடாமல் ஒதுக்குகின்றோம். எனவே இந்த கறிவேப்பிலை வைத்து சுவையான கமகமக்கும் பொடி செய்ய முடியும். இந்த பொடியை வைத்து சூடான சாதம் முதல் சூடான இட்லி வரை எளிமையாக சாப்பிட்டு விடலாம். இந்த கறிவேப்பிலை இட்லி பொடியை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் கறிவேப்பிலை
3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
3 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
1 டீஸ்பூன் சீரகம்
8 வற மிளகாய்
எலுமிச்சை அளவுள்ள புளி
5 பற்கள் பூண்டு
தேவையான அளவு உப்பு
கால் டீஸ்பூன் பெருங்காய தூள்
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை பொடி
ஒரு டீஸ்பூன் நெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து விதமான சூட்டில் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இவை நன்கு பொன்னிறம் ஆன பின்பு அதில் மல்லித்தூள், சீரகம், வற மிளகாய் மற்றும் புளி, பூண்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு வறுபட்டு வாசனை வரும் வேளையில் கறிவேப்பிலையை போட வேண்டும். அதனோடு சிறிதளவு கல் உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இதனை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடான பின்பு இட்லியை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் நாம் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியை சேர்த்து கலந்து விட்டு கிளறி விட வேண்டும். இறுதியாக நெய் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும். இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி இட்லி தயாராகிவிட்டது. இந்த கறிவேப்பிலை பொடியை இட்லி மட்டுமல்லாமல் சூடான சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இதனை உங்களது வீடுகளிலும் செய்து கொடுத்து மகிழுங்கள்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
இந்த இலைகள் செரிமான நொதிகளைத் தூண்டி, அஜீரணத்தைக் குறைத்து, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகின்றன. அவை மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைப் போக்க உதவும்.
கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
டாபிக்ஸ்