தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நாளைக்கு சண்டே; ஒரு கம்ப்ளீட் எஞ்சாய்மென்ட் வேணுமா? பீர் சிக்கன் செய்யலாமா? இதோ ரெசிபி!

நாளைக்கு சண்டே; ஒரு கம்ப்ளீட் எஞ்சாய்மென்ட் வேணுமா? பீர் சிக்கன் செய்யலாமா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Dec 21, 2024, 03:40 PM IST

google News
பீர் சிக்கன் செய்வது எப்படி என்று பாருங்கள்.
பீர் சிக்கன் செய்வது எப்படி என்று பாருங்கள்.

பீர் சிக்கன் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

தோல் நீக்காத சிக்கன் லெக்பீஸ் – 6

அதிக கசப்பில்லாத பீர் – 400 மிலி (எந்த பிராண்ட் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

கோதுமை அல்லது மைதா- 250 கிராம்

கார்ன் ஃப்ளோர் – 150 கிராம்

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்

முட்டை – 3

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

ஓரிகானோ – கால் ஸ்பூன்

எண்ணெய் – சிக்கன் பொரிக்க தாராளமாக

உப்பு – தேவையான அளவு

சாஸ் செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 100 மிலி

முட்டை – 1

எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்

சில்லி சாஸ் – ஒரு ஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

தோல் நீக்காத 6 சிக்கன் லெக் பீஸ்களை கழுவி ஈரம் வடிந்ததும். ஒரு மூடியுள்ள பாட்டிலில் போட்டு 400 மிலி பீர் ஊற்றி பாட்டிலை மூடி அரை மணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கவேண்டும். பின்னர் ஊறிய சிக்கனை எடுத்து காய்ந்த பேப்பர் நாப்கினால் நன்கு ஒற்றி எடுத்து பிறகு தோலை நீக்கவேண்டும். இதை ஒரு தட்டில் வைத்துவிடவேண்டும்.

கோதுமை அல்லது மைதா, கார்ன் மாவுகளோடு பெப்பர், மிளகாய் தூள், ஓரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். கலந்த மாவை இரண்டு கிண்ணங்களில் சரி பாதியாக பிரித்து ஒரு கிண்ணத்து மாவை நீர் விட்டு புட்டு போல உதிரி உதிரியாக கிளறி வைக்கவேண்டும்.

இன்னொரு கிண்ண மாவில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவைக்கு சிறிது நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்ககவேண்டும்.

கடாயில் எண்ணெய் வைத்து சூடானவுடன், சிக்கனை எடுத்து முட்டை கலந்து வைத்துள்ள மாவில் முதலில் முக்கி எடுத்து, அடுத்து உதிரி மாவு பவுலில் ஒரு தோய்ப்பு (முட்டையில் சிக்கன் முழுவதையும் நன்றாக தோய்ப்பது முக்கியம், உதிரி மாவில் ஒரு சுற்று சுற்றி பிரட்டவும்) சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், சூப்பரான ருசியில் அட்டகாசமான பீர் சிக்கன் தயார்.

சாஸ் செய்யும் முறை

சாஸிற்கு சொல்லிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு ஆம்லெட்டுக்கு கலக்குவது போல அடித்து கலக்கவேண்டும். ஆம்லெட் மிக்ஸர் மிஷினில் கலக்குவது சிறப்பு.

இதை சிக்கனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சூப்பர் சுவையானதாக இருக்கும். KFC சிக்கன் எல்லாம் இதன் ருசிக்கு பக்கத்தில் கூட வரமுடியாது.

ஏன் சிக்கனில் பியர்?

சிக்கனை பியரில் ஊற வைக்கும்போது பியரில் இருக்கும் மினரல்களும் கலோரியும் இறைச்சியை மிருதுவாக்கி அதன் ருசியை அதிகரிக்கிறது. எண்ணெய் அதிகம் குடிக்காது. இறைச்சியும் வேகமாக வெந்துவிடும்.

இந்த செய்முறையில் சொல்லப்பட்ட அளவு 6 சிக்கன் லெக் பீஸ் சமைக்க மட்டுமே. உங்களுக்கு அதிகம் வேண்டுமென்றால், இந்த அளவை அதற்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம். மேலும் நாளை சண்டேவை கொண்டாடுகிறேன் என பியர் சிக்கனை சாப்பிட பியரும் வேண்டும் என்று அடம்பிடித்தால், பின்னால் வரும் சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி