கொத்துத் கொத்தாக கொட்டும் முடியை தடுத்து, காடுபோல் முடி அடர்ந்து வளரவேண்டுமா? இந்த எண்ணெய் போதும்!
Dec 21, 2024, 01:49 PM IST
காடுபோல் முடி அடர்ந்து வளர நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு லாவண்டர் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள். அது தலைமுடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது என்று பாருங்கள். லாவண்டர் எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே முடியின் வேர்க்கால்களில் இந்த எண்ணெயை தடவவேண்டும். இது உங்கள் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.
வேர்க்கால்களில் மசாஜ்
உங்கள் தலையில் அதிகம் முடி வளர வேண்டுமெனில், இந்த நீர்த்த லாவண்டர் எண்ணெயை வைத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்யவேண்டும். அது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
தலையில் மாஸ்க்
லாவண்டர் எண்ணெயை, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் கலந்து தலையில் தடவவேண்டும். இதை அரை மணிநேரம் அப்படியே ஊறவிட்டு, பின்னர் தலையை அலசினால், உங்கள் தலைமுடி வலுவடையும், உங்களின் தலைமுடி ஆரோக்கியம் காக்கப்படும்.
ஷாம்பூ
நீங்கள் அன்றாடம் தலைக்கு குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பூவில் சில துளிகள் லாவண்டர் எண்ணெயைப் சேர்த்து தலைமுடியில் வேர்க்கால்களில் தேய்த்து குளித்தாலும், தலையில் முடி நன்றாக வளரும்.
தலைக்கு குளிக்கும் தண்ணீரில் கலந்துகொள்ளுங்கள்
லாவண்டர் எண்ணெயை தண்ணீரில் கலந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் தலைக்கு குளித்து முடித்து இறுதியாக ஊற்றி அலசுங்கள், இதனால் உங்களின் தலைமுடிக்கு பளபளப்பும் கிடைக்கும். உங்கள் தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.
சிகிச்சை
லாவண்டர் எண்ணெயை தண்ணீருடன் கலந்து ஒரு ஸ்பிரேயரில் ஊற்றி, உங்கள் தலையில் ஸ்பிரே செய்யுங்கள். இது உங்கள் தலைமுடியில் பனிபோன்ற படலத்தை உருவாக்கும். இதனால் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்.
சூடாக்கி பயன்படுத்துங்கள்
தேங்காய் எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் இரண்டையும் கலந்து மிதமான அளவு சூடாக்கி, உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் அதை தடவவேண்டும். அது உங்களின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, உங்களின் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
பொடுகைக் குறைக்கும்
லாவண்டர் எண்ணெய் பொடுகைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்களின் தலைமுடியை வளர்க்கிறது. அதற்கு நீங்கள் இந்த எண்ணெயை தலையில் வைத்து மசாஜ் செய்யவேண்டும்.
வலுப்படுத்தும் சீரம்
லாவண்டர் எண்ணெய், ஜொஜோபா எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளவேணடும். இதை உங்கள் தலையில் தடவினால், அது உங்கள் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். உங்கள் தலைமுடி சேதமடைவதை தவிர்க்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்