சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு சாப்பிடலாம் சில்லி சிக்கன்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு சாப்பிடலாம் சில்லி சிக்கன்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு சாப்பிடலாம் சில்லி சிக்கன்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

Priyadarshini R HT Tamil
Dec 09, 2024 05:17 PM IST

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் சில்லி சிக்கன். செய்வது எப்படி என்று பாருங்கள்.

சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு சாப்பிடலாம் சில்லி சிக்கன்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு சாப்பிடலாம் சில்லி சிக்கன்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

கடலை மாவு – 2 ஸ்பூன்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் – 2 ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

முட்டை – 1

சீரகத்தூள் – கால் ஸ்பூன்

எலுமிச்சைப்பழச்சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனில் இஞ்சி-பூண்டு பேஸ்ட், கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு, முட்டை, சீரகத்தூள், எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். இதை அரை மணி நேரமாவது ஊறவைத்துவிடவேண்டும்.

கடாயில் தாராளமாக எண்ணெய்விட்டு, சூடானவுடன் அதில் ஒவ்வொரு துண்டாகச் சேர்த்து பொரித்து எடுக்கவேண்டும். இதை அப்படியே சாப்பிடலாம். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும்.

இன்னொரு ரெசிபியையும் கற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து டிஃபன் வகைகளுக்கும் ஏற்ற தக்காளி தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று ஹெச்.டி. தமிழுடன் விருந்தோம்பல் வலைதளத்தின் முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10

நன்றாக பழுத்த தக்காளி – 2

வரமிளகாய் – 7

தேங்காய்த்துருவல் – கால் கப்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய்விட்டு சூடானவுடன், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கியவுடன், ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

அதே கடாயில் நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ள வேணடும்.

தக்காளியின் தோல் நிறம் மாறி லேசாக சுருங்கி வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

மிக்ஸி ஜாரில் சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறவைத்த பொருட்களை சேர்த்து அரைக்கவேண்டும்.

பின் அதனுடன் கால் தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும். பின் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்னியில் கலந்து கொள்ளவேண்டும். தக்காளி தேங்காய் சட்னி தயார்.

இது இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பொங்கல் என அனைத்து டிபஃன்களுக்கும் ஏற்றது.

குறிப்புகள்

இதில் தேங்காயை வதக்கியும் சேர்க்கலாம். அது ஒரு வித்யாசமான சுவையைக்கொடுக்கும்.

வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யும்போது ஒரு வித்யாசமான சுவை கிடைக்கும்.

நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.