தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்.. எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா! - ஜாக்கின் மறுபக்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்.. எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா! - ஜாக்கின் மறுபக்கம்!

தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்.. எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா! - ஜாக்கின் மறுபக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 07, 2024 10:28 AM IST

தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்..எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா என ஜாக் தன் வாழ்கையில் சந்தித்த கஷ்டங்களை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்து இருக்கிறார்.

தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்.. எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா! - ஜாக்கின் மறுபக்கம்!
தூக்கில் தொங்கிய அப்பா.. போலீஸ் ஸ்டேஷன் ஏற வைத்த செக்ஸ் டார்ச்சர்.. எண்ணெய் ஊற்றி நின்ற அம்மா! - ஜாக்கின் மறுபக்கம்!
ஜாக்குலின்
ஜாக்குலின்

தூக்கில் தொங்கிய அப்பா

ஜாக்குலின் பேசும் போது, “விஜய் டிவியில் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய கதையை நான் எங்குமே சொன்னதில்லை. அந்த வகையில் பார்த்தால், இதுதான் நான் யார்? என்னுடைய அம்மா யார்? என்று சொல்வதற்கான இடம் போலிருக்கிறது. மிகவும் சந்தோஷமாக ஜாலியாக சென்று கொண்டிருந்த என்னுடைய வாழ்வில் திடீரென அந்த சம்பவம் நடந்தது. எல்லோருக்கும் அவர்களது அப்பாவின் நினைவு என்பது வெவ்வேறு விதமாக பதிந்து இருக்கும்.

ஆனால், என்னுடைய அப்பாவின் நினைவு எனக்கு அவர் தூக்குக்கயிறில் தொங்கியது போன்றுதான் பதிந்து இருக்கிறது. காரணம், எனக்கு விபரம் தெரிந்து, என்னுடைய அப்பாவை நான் பார்த்த விதம் அப்படியானதுதான். இன்று வரை என்னுடைய அப்பாவின் முகம் எனக்கு அப்படித்தான் நினைவில் இருக்கிறது. அப்பா இறந்த பின்னர் என்னுடைய தாத்தாவிடம் சென்று அம்மா அப்பாவின் நிலத்தைக்கேட்டார். ஆனால் என்னுடைய தாத்தா, என் மகனே இல்லை ஆனதன் பின்னே, உனக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட அம்மா தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று நின்றார்.அங்கிருந்துதான் எங்களுடைய வாழ்க்கை தொடங்கியது என்று நினைக்கிறேன்.

செக்ஸ் டார்ச்சர்

காரணம், என் தாத்தாவிடம் சென்று என் அம்மாவை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதன் பின்னரே, எங்களுக்கான நிலம் கிடைத்தது. இதனைதொடர்ந்து, என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தினார். அது எனக்கு தெரிய வந்தும் கூட, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், என்னுடைய அப்பா என்னை அப்படித்தான் வளர்த்தார்.

 

ஜாக்குலின்
ஜாக்குலின்

ஒரு நாள் நானும் என்னுடைய அம்மாவும் வந்து கொண்டிருந்தோம். என் நண்பரிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபர், என் மீது காரை ஏற்றுவது போல வந்து பயமுறுத்தினார். இறுதியில் நான் அந்த சம்பவத்தை வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படி செய்தார் என்பது எனக்குத் தெரிந்தது. இதனையடுத்து நான் தைரியமாக காவல்நிலையம் என்று அந்த நபர் குறித்து புகார் செய்தேன்.

அங்கு தொடங்கி, சுப காரியங்களில் என் அம்மாவை முன்னே நிற்கக்கூடாது என்று கூறியவர்கள், அம்மாவை, என்னை சரியாக வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கேள்விக்கேட்டேன். ஒரு கட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே நோக்கமாக இருந்தது.

விமானத்தில் பணியாற்றும் பெண்ணாக வேலை பார்த்தேன். பின்னர், விஜய் டிவி நடத்திய நீங்கள் ஆகலாம் விஜய் டிவி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் நான் தேர்வானேன். அதன் பின்னர் என் மீது எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது. அதன் பின்னர் வாழ்க்கை எதிர்கொள்ளும் தைரியம் இன்னும் அதிகமானது. இப்போது இங்கே இருக்கிறேன். ஆகையால், கணவரையோ அல்லது மனைவியையோ பிரிந்து வாழும் பெற்றோர் கீழ் வளரும் குழந்தைகள் எதை நினைத்தாலும் அதனை அவர்களால் செய்ய முடியும். ஆகையால் மனச விட்றாதீங்க” என்று பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.