மிளகாய் உள்ளே நுழைந்த கதை.. இந்தியாவில் இதுதான் காரம்.. கருப்பு மிளகு ஒதுக்கப்பட்ட உணவு வரலாறு!
Chili History: உணவுக்கு காரத்திற்காக கட்டாயம் பயன்படுத்தப்படும் அடிப்படை தேவையாக பச்சை மிளகாய் விளங்கி வருகிறது. அது காய்ந்த நிலையில் சிவப்பு மிளகாயும் காரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன் நமது நாட்டில் காரத்திற்காக எதை பயன்படுத்தினார்கள் என்று தெரிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
Chili History: உயிரினங்கள் அனைத்திற்கும் அடிப்படை உணவுதான். அந்த உணவை ஒவ்வொரு தருணங்களில் மனித இனம் ஒவ்வொரு மாதிரி தயாரித்து சாப்பிட்டு வந்தனர். ஒவ்வொரு பொருளும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதற்கு ஏற்றபடி உணவு முறை பழக்கவழக்கம் மாறியது. உணவு தயாரிப்பதற்கு என சில முக்கியமான உணவுப்பொருட்கள் மிகவும் அவசியமாகும்.
அந்த முக்கிய உணவுப் பொருட்களில் முக்கிய இடத்தில் இருப்பதுதான் பச்சை மிளகாய். நமது இந்தியாவில் பல இடங்களில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு பச்சை மிளகாய் என கூறும் பலருக்கும் அது நம்மை நாட்டைச் சேர்ந்தது கிடையாது என தெரியாது.
உணவுக்கு காரத்திற்காக கட்டாயம் பயன்படுத்தப்படும் அடிப்படை தேவையாக பச்சை மிளகாய் விளங்கி வருகிறது. அந்த பச்சை மிளகாய் காய்ந்த நிலையில் சிவப்பு காய்ந்த மிளகாய் காரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன் நமது நாட்டில் காரத்திற்காக எதை பயன்படுத்தினார்கள் என்று தெரிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
இந்தியாவில் காரம்
முதலில் இந்தியாவில் உணவிற்கு காரத்திற்காக பயன்படுத்தப்பட்டது மிளகு தான். உணவு கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக காரத்திற்கு மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் மிளகுக்கு மருத்துவ குணம் அதிகம் உள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வணிகத்திற்காக வந்த வணிகர்கள் இதனை நமது இந்தியாவில் இருந்து வாங்கிச் சென்றுள்ளனர்.
இங்கிருந்து மிளகாய் வாங்கிச் சென்ற அரேபியர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதனை விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக இத்தாலி பகுதியில் வாழ்ந்த மக்கள் அரபு வணிகர்களிடமிருந்து மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். முன்பு ஒரு காலத்தில் நமது இந்தியாவில் இருந்து இஸ்தான்புல் வரை ஸ்பைஸ் சாலை ஏற்ற ஒரு சாலை தனியாக இருந்து வந்துள்ளது.
இந்த சாலையின் வழியாக பல மயில்கள் கடந்து இந்திய மசாலா பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் வணிகம் செய்யப்பட்டுள்ளன. மசாலா பொருட்களை வர்த்தகம் செய்வதற்காக இத்தாலி வணிகர்களான வெனிசியர்களும் அரேபியர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வைத்திருந்தனர்.
இஸ்தான்புல்லில் கிடைக்கக்கூடிய மசாலா பொருட்களை வாங்கி ஐரோப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்தனர். இதுபோல பல நாடுகளுக்கு வணிகத்தை செய்து வந்தனர். திடீரென வெனிசிய தலைமை அரபியர்கள் வெனிசியர்களுக்கு மட்டும் தான் பொருட்களை விற்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஐரோப்பாவில் இந்திய மசாலா பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்தது. விலை உயர்வை தாங்க முடியாத ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் மக்கள் இந்தியாவில் நேரடியாக பயணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அரேபியர்கள் அனைத்து வழியையும் மூடிவிட்டனர்.
மிளகாய் அறிமுகம்
அப்படி இந்தியாவிற்கு மாற்றுப் பாதை தேடி அலைந்த போதுதான் அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டது. தக்காளி எப்படி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதோ அதேபோலத்தான் மத்திய மற்றும் தெற்கு பகுதி அமெரிக்காவில் மிளகாய் கண்டுபிடிக்கப்பட்டது. கரீபியன் தீவுகளுக்கு செல்வதற்கு பதிலாக கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளில் இறங்கினார். அந்த இடத்தில்தான் முதன் முதலாக மிளகாயை பார்த்துள்ளார். ஒரே சுவையை தரக்கூடிய மிளகுக்கு பதில் இந்த மிளகாயை மாற்றாக வர்த்தகத்தில் பயன்படுத்தலாம் என நினைத்து ஐரோப்பாவிற்கு எடுத்துச் சென்றார்.
சிலர் அதை ஏற்க மறுத்தாலும் போர்ச்சுகீசியர்கள் உடனடியாக மிளகாயை அங்கீகரித்துக் கொண்டனர். வரும் காலங்களில் இந்த மிளகாயின் தேவை அதிகம் இருக்கும் என உணர்ந்து அதன் விதைகளை கண்டறிந்து எடுத்தனர். உடனே அங்கேயே அதனை பயிரிடத் தொடங்கி விட்டனர். அதற்குப் பிறகு வாஸ்கோடகாமா 15 ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்தார்.
இந்தியாவில் நுழைந்த மிளகாய்
அடுத்தடுத்து இந்தியாவை நோக்கி வந்த போர்ச்சுகீசிய வர்த்தகர்கள் அங்கேயே இருந்து தங்களது வர்த்தகங்களை செய்து வந்தனர். அதன் பின்னர் கோவா கோட்டைக்கு அருகே இருந்த தரிசு நிலங்களில் மிளகாய் பயிரிட்டு நமது இந்தியர்களுக்கு மிளகாய் முதன் முதலில் அறிமுகம் செய்து வந்தனர்.
அதன் பின்னர் இந்திய மக்கள் தங்களின் மசாலா பொருட்களோடு அதனையும் சேர்த்து பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொடர்ச்சியாக காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட மிளகு காலப்போக்கில் மருந்து மற்றும் முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மாறியது.
அதன் பின்னர் இந்தோனேசியா கிழக்கு ஆசிய நாடுகள் என அனைத்து இடங்களிலும் இந்த மிளகாய் பரவியது. தற்போது உலகம் முழுவதும் அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக மிளகாய் மாறத் தொடங்கியது. தற்போது பலவகை கொண்ட மிளகாய் மிகவும் முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது.
தொடர்புடையை செய்திகள்