தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சூப்பர் சுவையான டிஷ்!

சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சூப்பர் சுவையான டிஷ்!

Priyadarshini R HT Tamil

Nov 30, 2024, 02:29 PM IST

google News
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிங்கப்பூர் இட்லி ஃப்ரை ரெசிபி இதோ.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிங்கப்பூர் இட்லி ஃப்ரை ரெசிபி இதோ.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிங்கப்பூர் இட்லி ஃப்ரை ரெசிபி இதோ.

இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.

கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.

தேவையான பொருட்கள்

இட்லி - 3

மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் – 4 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 2

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – அரை ஸ்பூன்

முந்திரி – 20 கிராம்

வரமிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்

(வரமிளகாயை சூடான தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

கரம் மசாலாத் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து அதில் இட்லித் துண்டுகளைப் புரட்டி எடுத்து தனியே வைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், வர மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவேண்டும்.

நன்றாகக் கொதித்தவுடன், அதில் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்க்கவேண்டும். இத்துடன் மிளகாய் பேஸ்டை சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும். கலவை கிரேவி பதத்துக்கு வந்தவுடன், மாவுக் கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக செட் ஆனவுடன், இறக்கவேண்டும். இது சைனீஸ் வகை உணவு. இட்லி ஃப்ரை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி