’சர்வதேச ஜாகுவார் தினம் இன்று! அழிவின் விளிம்பில் ஜாகுவர் ரக சிறுத்தைகள்! வச்சு செய்யும் வேட்டைக்காரர்கள்!’
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’சர்வதேச ஜாகுவார் தினம் இன்று! அழிவின் விளிம்பில் ஜாகுவர் ரக சிறுத்தைகள்! வச்சு செய்யும் வேட்டைக்காரர்கள்!’

’சர்வதேச ஜாகுவார் தினம் இன்று! அழிவின் விளிம்பில் ஜாகுவர் ரக சிறுத்தைகள்! வச்சு செய்யும் வேட்டைக்காரர்கள்!’

Kathiravan V HT Tamil
Nov 29, 2024 06:00 AM IST

International Jaguar Day 2024: ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 14 ஜாகுவார் ரேஞ்ச் நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 2018ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

’சர்வதேச ஜாகுவார் தினம் இன்று! அழிவின் விளிம்பில் ஜாகுவர் ரக சிறுத்தைகள்! வச்சு செய்யும் வேட்டைக்காரர்கள்!’
’சர்வதேச ஜாகுவார் தினம் இன்று! அழிவின் விளிம்பில் ஜாகுவர் ரக சிறுத்தைகள்! வச்சு செய்யும் வேட்டைக்காரர்கள்!’

அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த ஜாகுவார் ரக சிறுத்தைக பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமானவை. காடுகள் அழிப்பு மற்றும் வேட்டைக்காரர்கள் காரணமாக இந்த ரக சிறுத்தைகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருகின்றது. 

சர்வதேச ஜாகுவார் தினத்தின் வரலாறு

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 14 ஜாகுவார் ரேஞ்ச் நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 2018ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. அடுத்து வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஜாகுவார் வாழும் 30 நிலப்பரப்புகளை அவற்றின் வரம்பில் பாதுகாப்பதற்கான உத்திகளை குறிப்பிடுகின்றது. 

ஜாகுவார் ரக சிறுத்தைகள் தற்போது சிவப்பு பட்டியலில் உள்ள உயிரினம் ஆகும். முதன்மையாக வாழ்விட அழிவு, மனித-வனவிலங்கு மோதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவற்றின் காரணமாக அதன் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் வரை குறைந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜாகுவார் ரக சிறுத்தைகளின் எண்ணிக்கை 15,000 முதல் 16,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக அளவில் ஜாகுவார் ரக சிறுத்தைகள் வசிக்கும் அமேசான் காட்டுப்பகுதி ஆனது காடழிப்பை எதிர்கொள்கிறது. 

ஜாகுவார் ரக சிறுத்தைகள் குறித்து அறியப்படாத தகவல்கள்:-

1.அறிவியல் பெயர்: 

பாந்தெரா ஒன்கா (Panthera onca)

2.வாழ்விடங்கள்: 

ஜாகுவார் ரக சிறுத்தைகள் அமேசான் மழைக்காடுகளில் நிறைந்து வாழ்கின்றன. அமெரிக்க கண்டத்தில் உள்ள 18 நாடுகளில் உள்ள புல்வெளிகள் மற்றும் ஈரநிலங்களிலும் இவைகள் நிறைந்து உள்ளன. 

3.வாழ்விட அழிவு: 

விவசாயம், மரம் வெட்டுதல் மற்றும் நகரமயமாக்கலுக்கான காடழிப்பு. வேட்டை ஆகியவற்றா ஜாகுவார்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைத்துள்ளது.

4.மனித-வனவிலங்கு மோதல்: 

ஜாகுவார் பெரும்பாலும் கால்நடைகளை வேட்டையாடுகிறது, இது விவசாயிகளால் பழிவாங்கும் கொலைகளுக்கு வழிவகுக்கிறது.

5. சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம்: ஜாகுவார் ரக சிறுத்தைகள் அவற்றின் தோல்கள், பற்கள் மற்றும் பிற உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.