மூலநோய் முற்றிலும் குணமாகும்; வாயுத்தொல்லை எளிதில் நீங்கும் – எளிய சித்த மருத்துவ குறிப்புகள்!
Nov 30, 2024, 01:34 PM IST
எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
சித்த மருத்துவத்தில் சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது
வாயுத்தொல்லை
வேப்பம்பூவை உலர்த்தி பொடியாக்கி, சூடான தண்ணீரில் கலந்து உட்கொள்வதால் வாயுத்தொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் குணமாகும்.
மூலம்
கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, துவரம் பருப்புடன் சேர்த்து, அதில் சாம்பார் வைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலும் குணமாகும்.
தீப்புண்
வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால், தீப்புண், சீகு வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரைலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இந்த 4 பொருட்களையும் சமஅளவு எடுத்து, சேர்த்து சோறு வடித்த கஞ்சியில் கலந்து, மீண்டும் சூடாக்கி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளையும் தடவினால் குணமாகும். இவற்றை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பலன் கிட்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்