சிம்பிளான, ஈசியான வெண்ணிலா ஸ்பான்ஞ் கேக்! இந்த கிறிஸ்துமஸ்க்கு செஞ்சிடலாமா?
Dec 05, 2024, 04:50 PM IST
வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
சர்க்கரை பொடித்தது – ஒரு கப்
பேக்கிங் பவுடர் – ஒன்றரை ஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – ஒரு கப்
வெண்ணிலா எசன்ஸ் – 2 ஸ்பூன்
வெண்ணெய் – கால் கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். இதில் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
இதை ஒரு கேக் டின்னில் ஊற்றி சமப்படுத்தி, இட்லி பாத்திரத்தில் வைத்து குறைவான தீயில் 40 நிமிடங்கள் வேகவைக்கவேண்டும். சிம்பிளான, ஈசியான வெண்ணிலா கேக் தயார். இதை நீங்கள் வீட்டில் செய்வது எளிது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதில் நீங்கள் முட்டை வேண்டுமானாலம், அடித்து சேர்த்துக்கொண்டு செய்யலாம்.
மற்றுமொரு கேக் ரெசிபி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்
முட்டை வேண்டாம், அவனும் வேண்டாம் வீட்டிலே சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பாருங்கள். முன்பு காலத்தில் எல்லாம் கேக்குகள் என்றால் அதை கடையில் சென்றுதான் சாப்பிடவேண்டும். பிற்காலத்தில் கேக்குகள் என்றால் அதை அவன் வைத்துதான் தயாரிக்கும் நிலை இருந்ததது. ஆனால் நாம் வீட்டிலே பல்வேறு வழிகளிலும் அவன் இல்லாமல் கேக் தயாரிக்க முடியும். அதுபோன்ற ஒரு வகை கேக் தயாரிக்கும் முறைதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லேட் கேக்கை வீட்டிலே தயாரித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கிறிஸ்துமஸ் இல்லாத காலத்தில் கூட கேக் செய்யவேண்டி அடம்பிடிப்பார்கள். இந்த கேக்கை செய்யும் முறையும் எளிது. இதற்கு முக்கியமான ஒரு ஃப்ளாட் நான்ஸ்டிக் பாத்திரம் அல்லது கடாயை வாங்கிக்கொள்ளுங்கள். அது இருந்தால் போதும் சுலபமாக கேக் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – அரை கப்
சர்க்கரை – 2 கப்
மோர் – ஒன்றரை கப்
வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
மைதா மாவு – 2 கப்
கோகோ பவுடர் – ஒரு கப்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – கால் ஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – கால் கப்
இன்ஸ்டன்ட் காபித்தூள் – ஒரு ஸ்பூன்
வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
பட்டர் ஷீட் – 1
சுகர் சிரப்
கிரிம் செய்ய
ஹெவி கிரீம் – 2 கப்
ஐசிங் சுகர் – ஒரு கப்
கோகோ பவுடர் – ஒரு கப்
வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை, மோர், வெண்ணிலா எசன்ஸ் என அனைத்தும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவேண்டும். அடுத்து ஒரு சல்லடை வைத்து அதில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து, ஏற்கனவே கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கட்டிப்படாமல் நன்றாக கலந்துகொள்ளவேண்டும். மாவு நல்ல தோசை மாவு பதத்துக்கு வரும் வரை கரைத்துக்கொள்ளவேண்டும். கெட்டிபடாமல் கலக்கவேண்டும்.
ஒரு நான்ஸ்டிக் ஃப்ளாட் பாத்திரம் அல்லது கடாயை எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சுற்றிலும் நன்றாக வெண்ணெய் தடிவி, அடியில் பட்டர் ஷீட்போட்டு இந்த மாவை சேர்த்து நன்றாக தட்டி நேரடியாக அடுப்பில் வைத்துவிடவேண்டும்.
அடுப்பை முற்றிலும் குறைத்து, மூடி வைத்து 60 நிமிடங்கள் வைக்கவேண்டும். கேக் நன்றாக வெந்து வரும். ஒரு மணிநேரம் கழித்து டூத் பிக் பரிசோதனை செய்துவிடடு, கேக் வெந்து விட்டால் இறக்க வேண்டும்.
நன்றாக ஆறியவுடன் தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் நன்றாக டூத் பிக் வைத்து குத்தி சுகர் சிரப்பை விடவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஹெவி கிரீம், ஐஸிங் சுகர், கோகோ பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். இதை பீட்டர் வைத்து பீட் செய்துகொள்ளலாம். பீட்டர் இல்லாதவர்கள் மிக்ஸியில் அடித்து எடுத்துக்கொள்ளலாம். இதை அப்படியே கேக்கின் மீது தடவி சிறிது நேரம் செட்டானவுடன் சாப்பிட்டால் சூப்பர் சுவையான சாக்லேட் கேக் வீட்டிலே தயார். இந்த கிறிஸ்துமஸ்க்கு இதை செய்து விடலாமா?
டாபிக்ஸ்