தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : சைவப் பிரியர்களா நீங்கள்? உங்கள் உடலுக்கு புரதம் கிடைக்கும் வழிகளை தெரிஞ்சுக்கங்க!

Morning Quotes : சைவப் பிரியர்களா நீங்கள்? உங்கள் உடலுக்கு புரதம் கிடைக்கும் வழிகளை தெரிஞ்சுக்கங்க!

Priyadarshini R HT Tamil

Oct 01, 2024, 06:00 AM IST

google News
Morning Quotes : சைவப் பிரியர்களா நீங்கள்? உங்கள் உடலுக்கு புரதம் கிடைக்கும் வழிகளை தெரிந்துகொண்டு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
Morning Quotes : சைவப் பிரியர்களா நீங்கள்? உங்கள் உடலுக்கு புரதம் கிடைக்கும் வழிகளை தெரிந்துகொண்டு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

Morning Quotes : சைவப் பிரியர்களா நீங்கள்? உங்கள் உடலுக்கு புரதம் கிடைக்கும் வழிகளை தெரிந்துகொண்டு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் 10 காய்கறிகளை தெரிந்துகொண்டால், நீங்கள் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் என்றால், உங்களுக்கு புரதச்சத்துக்கள் கிடைக்கும். அதிக புரதச்சத்துக்கள் கொண்ட காய்கறிகள் என்னவென்று பார்க்கலாம். நாம் பீன்ஸ்கள் மற்றும் இறைச்சியைத்தான் புரதச்சத்துக்களுக்காக நாடியிருப்போதும். ஆனால் சில பச்சை காய்கறிகளில் உங்களுக்கு புரதச்சத்துக்கள் கிடைக்கும். எனவே நீங்கள் அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்களை எடுக்க விரும்பினால், இதோ இந்த பச்சை காய்கறிகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் தேவையான அளவு புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும். உங்களின் அன்றாட புரதத்தேவையையும் பூர்த்தி செய்யும். ஏனெனில், புரதச்சத்துக்கள் அதிகம் எடுப்பவர்களின் வாழ்நாளே நீட்டிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் கட்டாயம் இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்து பலன்பெறுங்கள்.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் கொஞ்சம் இனிப்பு சுவை இருக்கும். இதில் முழு புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பச்சை பட்டாணியில் மேலும் எண்ணற்ற சத்துக்களும் உள்ளன. ஒரு கப் வேகவைத்த பச்சை பட்டாணியில் 8.7 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. பச்சை பட்டாணியை நீங்கள் கிரேவிகள், சாலட்கள் மற்றும் பாஸ்தாக்களில் சேர்த்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்களும் உள்ளன. அது உங்கள் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகின்றன,

பருசெல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் மரக்கோஸ்கள்

இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒரு கப் சமைத்த ப்ருசெல்ஸ் ஸ்ப்ரவுட்ஸில் 5.8 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளன. அவற்றை வறுக்கும்போது அதில் உள்ள இனிப்புச்சுவை வெளிப்படும். இதனால் அது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் ஆகும்.

கீரை

பாலக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் ஆகியவை உள்ளன. ஒரு கப் பாலக்கீரையில் 5.3 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. பாலக்கீரையை நீங்கள் சாலட், ஸ்மூத்திகள் மற்றும் கடையல், பொரியல், மசியல் என செய்து சாப்பிடலாம். இதில் இரும்புச்சத்துக்கள், கால்சியச் சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.

காலார்ட் கீரை

காலார்ட் கீரை தென்னிந்திய சமையலில் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதில் அதிகளவில் புரதச்சத்துக்கள் உள்ளது. ஒரு கப் காலார்ட் கீரையில் 5.1 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் மெதுவாக சமைக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் நன்றாகக் கிடைக்கும்.

காளான்கள்

காளான்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கப் நமைத்த காளானில் 4 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளன. இதன் சுவையும் இதை பரவலாகப் பயன்படுத்தும் காய்கறியாக வைத்துள்ளது. இதையும் நீங்கள் பல்வேறு டிஷ்களில் பயன்படுத்தலாம்.

இனிப்பு சோளம்

இனிப்பு சோளம் அதன் இனிப்புச் சுவைக்கும் மட்டுமல்ல, அதில் உள்ள புரதச்சத்துக்களுக்காகவும் பிரபலமானது. ஒரு கப் சமைத்த ஸ்வீட் கார்னில் 4 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. மேலும் எண்ணற்ற நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளது.

ப்ரோகோலி

ப்ரோகோலி ஒரு சிறந்த காயாகும். ஒரு கப் சமைத்த ப்ரோகோலியில் 2.4 கிராம் புரதச்சத்துக்கள் மட்டுமே கிடைத்தாலும், அதை வேகவைத்து அல்லது வறுத்து அல்லது கிரேவியில் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உடலுக்கு அதிக நன்மையைத்தரும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரிலும் குறிப்பிடும்படியான அளவு புரதச்சத்துக்கள் உள்ளது. ஒரு கப் சமைத்த காலிஃப்ளவரில் 2 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவு. காலிஃபிளவரில் சாதம், பொரியல், வறுவல் என செய்து சாப்பிட சுவை அள்ளும்.

மக்காச்சோளம்

மக்காச்சோளம் வேறு, ஸ்வீட்ர் கார்ன் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஒரு கப் சமைத்த மக்காச்சோளத்தில் 3.7 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதை சாலட்களுடன் சேர்த்து, வேகவைத்த என சாப்பிடலாம்.

காலே

காலே எளிதாக அனைத்து இடத்தில் கிடைக்காது. காலேயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று அழைக்கலாம். சமைத்த காலேயில் 2 முதல் 3 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இதை நீங்கள் சாலட்கள், ஸ்மூத்திகள் மற்றும் வதக்கி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி