Badam Milk Powder : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் பவுடர்! இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Badam Milk Powder : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் பவுடர்! இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக!

Badam Milk Powder : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் பவுடர்! இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக!

Priyadarshini R HT Tamil
Oct 28, 2023 10:00 AM IST

Badam Milk Powder : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் பவுடர். இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக, பாலில் கலந்து குடிக்க ஏதுவானது. இந்த மழைக்காலத்தில் ஆரோக்கியமாக குளிரை துரத்தலாம்.

Badam Milk Powder : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் பவுடர்! இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக!
Badam Milk Powder : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் பவுடர்! இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக!

முந்திரி – ஒரு கைப்பிடி

பிஸ்தா – ஒரு கைப்பிடி

சர்க்கரை – 1 கப்

ஏலக்காய் – 4

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

குங்குமப்பூ – 2 சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதில் நன்றாக கழுவி சுத்தம் செய்த பாதாமை சேர்க்க வேண்டும். அடுப்பை அணைத்து அதை அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து அதை எடுத்து, தண்ணீரை வடித்துவிட்டு, தோலை உரித்தால், நன்றாக உரிக்கப்பட்டு பாதாம்களை தனியாக எடுக்க முடியும்.

அந்த பாதாமை எடுத்து, நன்றாக உலர்த்தி, பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ட்ரையாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பச்சை வாசம் போகும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, அதை ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்துவிடவேண்டும்.

அதனுடன் கொடுத்துள்ள சர்க்கரை, ஏலக்காய், மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முந்திரி மற்றும் பிஸ்தாவை நன்றாக துருவி அந்த பாதாம் கலவையில் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

பின்னர் குங்கமப்பூவையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

காய்ச்சிய பாலில், ஒரு ஸ்பூன் கலந்து உங்களுக்கு இனிப்பு கூடுதலாக தேவைப்பட்டால் அரை ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருக அருமையான பாதாம் பால் கிடைக்கும்.

மழைக்காலத்தில் சூடான பானங்களை மட்டும்தான் நாம் அதிகம் விரும்பி அருந்துவோம். அதற்கு இந்த பாதாம் பால் மிகவும் சரியான தேர்வு. எனவே இப்போதே இந்த பாதாம் பால் மிக்ஸை செய்து வைத்துக்கொள்ளுங்கள். மழையை கொண்டாடலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.