Rasamalai Recipe: அனைவரும் ரசித்து சாப்பிடும் ரசமலாய் செய்வது எப்படி? தித்திக்கும் இனிப்பு ரெஸிபி ரெடி!-how to prepare rasamalai dessert in home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rasamalai Recipe: அனைவரும் ரசித்து சாப்பிடும் ரசமலாய் செய்வது எப்படி? தித்திக்கும் இனிப்பு ரெஸிபி ரெடி!

Rasamalai Recipe: அனைவரும் ரசித்து சாப்பிடும் ரசமலாய் செய்வது எப்படி? தித்திக்கும் இனிப்பு ரெஸிபி ரெடி!

Suguna Devi P HT Tamil
Sep 27, 2024 04:13 PM IST

Rasamalai Recipe: இனிப்பு உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவோர் விருப்ப பட்டியலில் முதன்மையான இடத்தை பிடிப்பது சில இனிப்பு வகைகள் தான். அதில் முக்கியமான ஒன்று தான் ரசமலாய் எனும் இனிப்பு உணவு.

Rasamalai Recipe: அனைவரும் ரசித்து சாப்பிடும் ரசமலாய் செய்வது எப்படி? தித்திக்கும் இனிப்பு ரெஸிபி ரெடி!
Rasamalai Recipe: அனைவரும் ரசித்து சாப்பிடும் ரசமலாய் செய்வது எப்படி? தித்திக்கும் இனிப்பு ரெஸிபி ரெடி!

தேவையான பொருட்கள் 

2 லிட்டர் பால் 

1 எலுமிச்சம் பழம்

300 கிராம் சர்க்கரை 

சிறிதளவு ஏலக்காய் தூள் 

சிறிதளவு பாதாம் 

சிறிதளவு பிஸ்தா 

சிறிதளவு முந்திரி

1 டேபிள் ஸ்பூன் சோள மாவு 

1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ

செய்முறை 

முதலில் ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆடை சேராமல் காய்ச்ச வேண்டும். பின்னர் பால் கொதி நிலையில் இருக்கும் போது எலுமிச்சையை வெட்டி அதன் சாறை எடுத்து விட வேண்டும். இதில் சில மணி நேரங்களில் பன்னீர் கிடைத்து விடும். பின்னர்  முந்திரி, பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். இப்போது அந்த பாலை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வடிகட்டி மூலம் தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரித்துக் கொள்ளவும். பிரித்த பன்னீரில் உள்ள அனைத்து நீரையும் வடிகட்ட வேண்டும். பின்னர் ஒரு துணியில் பன்னீரை இறுக கட்டி அப்படியே அரை மணி நேரம் வைக்க வேண்டும். 

பின்னர் ராப்ரி செய்ய, மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால், 200 கிராம் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் சிறிதளவு குங்குமப்பூ, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் மீதம் உள்ள சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து சர்க்கரை பாகை தயார் செய்யவும். இப்பொழுது செய்து ராப்ரி செய்ய காய வைத்த பாலில்  தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, மற்றும் பாதாமை போட்டு கலக்கி விடவும். பின் கட்டி வைத்திருந்த பன்னீரை எடுத்து அடிக்கில் சோளமாவு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். 

அடுப்பில் வைத்திருந்த சர்க்கரை பாகில் இந்த பன்னீரை ஒன்று ஒன்றாக போட வேண்டும். சர்க்கரை தண்ணீரில் சிறிது நேரம் வேக விடவும். இப்போது பன்னீர் நன்றாக வெந்ததும், அதை எடுத்து ராப்ரியில் போட்டு ஊற விடவும்.  இது சில மணி நேரங்கள் ஊறிய பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே சிறிதளவு குங்குமப்பூவை தூவி பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் சுவையான ரசமலாய் தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.